செய்திகள்

இன்று ஆரம்பமானது புதன் பெயர்ச்சி.. எந்தெந்த ராசிகாரர்களுக்கு என்னென்ன நன்மைகளை தருவார் என்று பார்க்கலாம்..!

நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது. அப்படி இன்று ஆரம்பமாகும் புதன் பெயர்ச்சி எந்தெந்த ராசிக்களுக்கு என்னென்ன நன்மை மற்றும் தீமைகளை அளிப்பார் என்று பார்க்கலாம்.

மேஷம்

வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் குறிப்பாக, வெளிநாட்டு வேலைக்காக முயற்சி செயது கொண்டிருப்பவர்கள் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். கடல் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் வந்தால் விட்டுவிடாதீர்கள். நிறைய ஆதாயங்கள் உண்டாகும். கல்வித்துறையில் மாணவர்களுக்கு நினைத்தபடி எண்ணங்கள் நிறைவேறும்.

கால்நடைகள் மூலம் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். பெற்றோர்களுடைய ஆதரவினால் உங்களுடைய மனம் மகிழ்ச்சி அடையும். பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும். புதிய தொழில்முறை பயணங்கள் மேற்கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

ரிஷபம்

எந்த காரியமாக இருந்தாலும் அதைக் கொஞ்சம் நிதானத்துடன் செயல்பட வேண்டியது நல்லது. உங்களுக்குத் தேவையில்லாத அலைச்சல்கள் உண்டாகும். இதுவரை இருந்து வந்த கடன் தொல்லைகள் குறைய ஆரம்பிக்கும். அரசு அதிகாரிகள் மூலமாக உங்களுக்குச் சாதகமான நிலை உண்டாகும். புதிதாக வேலை தேடுகின்றவர்களுக்கு சுப செய்திகள் வந்து சேரும். சுய தொழிலில் உங்களுக்கு மேன்மையான சூழல்களே உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மிதுனம்

கலைத்துறையில் உள்ளவர்கள் மென்மேலும் புதிய நுட்பங்களைக் கற்றுக் கொள்ள முயற்சி செய்வீர்கள். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக ஊழியர்களிடம் கொஞ்சம் கூடுதல் நிதானத்துடன் இருப்பது நல்லது. தொழில் சம்பந்தப்பட்ட அலைச்சல்கள் மூலம் உங்களுக்கு லாபம் உண்டாகும். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.

கடகம்

நீங்கள் நினைத்த செயல்களை செய்து முடிப்பதற்கு கொஞ்சம் கடுமையைாக உழைக்க வேண்டியிருக்கும். வாகனங்களில் பயண்ஙகள் மேற்கொள்கிற போது கொஞ்சம் கவனமாக இருங்கள். நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பண வரவு வந்து சேரும். அதனால் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள்.

தொழிலில் உங்களுடைய கூட்டாளிகளோடு கொஞ்சம் அனுசரித்துப் போவது நல்லது. மனதுக்குள் தோன்றும் புதுவித எண்ணங்களால் உங்களுக்கு மன சஞ்சலங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர்நீல நிறமும் இருக்கும்.

சிம்மம்

வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. தேவையற்ற வாக்குறுதிகளைத் தவிர்ப்பது நல்லது. சுப காரியங்களின் மூலம் சுப விரயச் செலவுகள் ஏற்படும். உங்களுடைய வாதத் திறமையினால் மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள்.

வெளியூரக்குப் பயணங்கள் மேற்கொள்வதன் வழியாக உங்களுக்கு அனுகூலமான சூழல்கள் உண்டாகும். அடுத்தவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து அதன்மூலம் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

கன்னி

முக்கியமான சில முடிவுகளை எடுக்க வேண்டிய சூழல்கள் உருவாகும். உங்களுடைய உடன் பிறந்த சகோதர சகோதரிகள் மூலம் உங்களுக்கு அனுகூலமான விஷயங்கள் உண்டாகும். கூடுதல் தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மனம் தெளிவாக இருக்கும். இதுவரை இருந்து வம்புஇ வழக்குப் பிரச்சினைகள் யாவும் ஒரு முடிவுக்கு வரும். உங்களுடைய நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக் கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

துலாம்

உங்களுடைய முழு திறமைகளையும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொழிலில் உங்களுக்கு இதுவரை இருந்து வந்த பிரச்சினைகள் யாவும் தீரும்.வீடு மற்றும் மனை விருத்திக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வுலையில் இருந்து வந்த இடர்பாடுகள் நீங்கி வெற்றி கிடைக்கும். உங்களுடைய உடைமைகள் மீது முழு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

பழைய நினைவுகளால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். சந்தோஷமான தருணங்களை நினைத்து மகிழ்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

விருச்சிகம்

நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். தொழில் சம்பந்தப்பட்ட முயற்சிகளில் புதிய அணுகுமுறைகளைக் கையாளுவீர்கள். உஙர் கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு இன்று சாதகமான நாளாகவே அமையும். நீங்கள் செய்யும் சுய தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.எதிர்பார்த்த இடத்திலிருந்து கடன் உதவிகள் கைக்கு வந்து செரும். இதுவரை இருந்த குழப்பங்களுக்கு நல்ல விடை கிடைக்கும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

தனுசு

குடும்பத்தில் உள்ளவர்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். வெளி வட்டாரங்களில் உங்களுடைய செல்வாக்கு உயர ஆரம்பிக்கும். நண்பர்கள் மூலமாக உங்களுக்குப் பொருளாதார உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய நபர்களுடைய நம்பிக்கையைப் பெறுவீர்கள். வீடு மற்றும் மனைகள் மூலம் லாபம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.

மகரம்

குடும்பத்தில் உள்ளவர்களுடைய எண்ணங்களையும் மனதையும் புரிந்து செயல்படுவீர்கள். இதுவரையிலும் நிலுவையில் இருந்த பண வரவுகள் கைக்குக் கிடைக்கும். உங்களுடைய மிகவும் சாதுர்யமான பேச்சின் மூலம் அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள். பயணங்களின் மூலம் மனம் லேசாகும். புத்துணர்ச்சியாக உணர்வீர்கள். அண்டை வீட்டாரிடம் கொஞ்சம் அனுசரணையோடு நடந்து கொள்ளுங்கள்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

கும்பம்
மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். நீண்ட நாட்களாகத் தடைபட்டுக் கொண்டிருந்த காரியங்கள் ஒரு முடிவுக்கு வரும். வீட்டில் குழந்தைகளுடைய ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். முக்கியமான பதவியில் இருப்பவர்கள் உங்களுடன் பணிபுரிகின்றவர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது. தொழில் சம்பந்தப்பட்ட போட்டிகளைச் சமாளிப்பீர்கள்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.

மீனம்

திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகளில் நல்ல செய்திகள் வந்து சேரும். தொழிலில் பிரபலமான ஆட்களுடைய அறிமுகங்கள் கிடைக்கும். உங்களுடைய தேவைகள் யாவும் நிறைவேறும். நீங்கள் எதிர்பார்த்த இடத்தில் இருந்து பண வரவு கைக்கு வந்து சேர கால தாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள். உயர் அதிகாரிகளுக்கு உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

இன்று ஆரம்பமானது புதன் பெயர்ச்சி.. எந்தெந்த ராசிகாரர்களுக்கு என்னென்ன நன்மைகளை தருவார் என்று பார்க்கலாம்..! 1

Back to top button