செய்திகள்

பாடசாலை அருகாமையில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!! காணொளி

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D..%21%21+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF+

பதுரலிய – திக்ஹேனயில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் சில கைக்குண்டுகளை வீசிச் சென்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர், கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் அப்பு ஆராச்சிகே பவித்ர மதுசங்க என்ற 32 வயதுடையவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

சந்தேகத்துக்குரியவர் பதுரலிய – ஹெடிகொல்ல பகுதியை சேர்ந்தவராவார்.

குறித்த கைக்குண்டுகள் பாடசாலையில் காவலாளியினால் நேற்று காலை கண்டுபிடிக்கப்பட்டு, காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, காவல்துறையினரும், இராணுவத்தினரும் இணைந்து குறித்த கைக்குண்டுகளை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Back to top button