செய்திகள்

இன்று மகா சிவ­ராத்­திரி!

இன்று மகா சிவ­ராத்­திரி! 1

மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி திதி ராத்திரியையே நாம் மகா சிவராத்திரியாக கொண்டாடுகிறோம். இந்த நன்னாளில் சிவனை வேண்டி விரதம் இருப்பதால் எம பயம் நீங்குதல், தீர்த்த நோயில் இருந்து விடுபடுதல் போன்ற பல அறிய பலன்களை பெறலாம். மகா சிவராத்திரி அன்று விரதம் இருப்பது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

காலையில் எழுந்தவுடன் குளித்துவிட்டு வீட்டில் பூஜை செய்திட்டு அருகில் உள்ள சிவன் கோயிலிற்கு சென்று, “எம்பெருமானே நான் இன்று மகா சிவராத்திரி விரதம் இருக்க போகிறேன். என்னுடைய விரதத்தில் எந்த தடங்கலும் நேராமல் நான் இந்த விரதத்தை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொண்டு விரதத்தை தொடங்கலாம்.

இன்று மகா சிவ­ராத்­திரி! 2

விரதம் இருப்பவர்கள் முடிந்தவரை மூன்று வேலையும் உணவு உண்ணாமல் விரதம் இருப்பது நல்லது. முடியாதவர்கள் இருவேளை பால் பழம் மற்றும் ஒரு வேலை உணவு உண்ணலாம். நாள் முழுக்க “ஓம் நமசிவாய” என்னும் மந்திரத்தை ஜபித்தவாறே இருக்க வேண்டும். வேலைக்கு செல்பவர்கள் சிவனை நினைத்துக்கொண்டு வேலையை செய்யலாம்.

மாலையில் மீண்டும் சிவன் கோயிலிற்கு சென்று சிவனுக்கு நடக்கும் நான்கு கால வழிபாட்டில் கலந்துகொள்வது நல்லது. முதல் காலத்தில் சோமாஸ்கந்தரை வழிபடவேண்டும். இரண்டாம் காலத்தில் தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும். மூன்றாம் காலத்தில் லிங்கோத்பவரை வழிபடவேண்டும், நான்காம் காலத்தில் சந்திரசேகரரை(ரிஷபாரூடர்) வழிபட வேண்டும்.

Image result for sivan

ஆடற்கூத்தன் என்று சிவபெருமானுக்கு ஒரு பெயர் உண்டு. தனது திருநடனத்தால் உலகம் அனைத்தையும் ஆட்டுவிப்பவராக சிவ பெருமான் இருக்கிறார். பிரபஞ்சத்தின் அனைத்துமாகி இருக்கும் சிவபெருமானை உலகம் முழுவதும் பல கோடி கணக்கான பக்தர்கள் வழிபடுகின்றனர்.

அதிலும் சிவனை வழிபடவும், அந்த சிவனில் நம்மை ஒருங்கிணைக்கவும் செய்கின்ற ஒரு அற்புத நாளாக மகா சிவராத்திரி தினம் இருக்கிறது. அன்றைய தினத்தில் சிவனின் அருளை பெற நாம் செய்ய வேண்டியது குறித்து இங்கு தெரிந்து கொள்ளாலாம்

மாசி மாதத்தில் தேய்பிறை காலத்தில் வருகிற ஒரு அதி அற்புத நாளாக மகா சிவராத்திரி தினம் இருக்கிறது. முதல் நாளன்று ஒருவேளை உணவு உண்டு, சுக போகங்கள் அனுபவிக்கும் எண்ணங்களையும், செயல்களையும் தவிர்த்து மனதார சிவனை நினைத்து வழிபடவேண்டும்.

சிவராத்திரி தினத்தன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரிய உதயத்தின் போது சூரிய பகாவானை வணங்கிய பின்பு, அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று சிவபெருமானை வணங்க வேண்டும். கோயிலில் வழிபாடு முடிந்து வீட்டுக்கு வந்தவுடன், பூஜையறையில் சிவராத்திரி பூஜை செய்வதாற்கான இடத்தைச் நன்கு சுத்தம் செய்து, பூமாலைகள், தோரணங்கள் கட்டி அலங்கரிப்பது நல்லது.

நண்பகலில் நீராடி, உங்கள் வீட்டிலேயே சிவபெருமானுக்கு உச்சி கால பூஜைகளை முடித்து விடவேண்டும். பின்பு உங்கள் வீட்டருகில் இருக்கும் கோயிலுக்கு சென்று அங்கு நடைபெற வேண்டிய சிவராத்திரி பூஜைக்கான மலர்கள், பழங்கள், இளநீர், சந்தனம், விபூதி மற்றும் இதர பூஜை பொருட்களை தந்து விட்டு மீண்டும் வீடு திரும்ப வேண்டும்.

Related image

மறுபடியும் நீராடி, மாலை நேர பூஜைகளை முடித்துவிட்டு, முன்பு பூஜையறையில் சுத்தம் செய்து அலங்கரிக்கப்பட்ட இடத்தில் ஓர் உயர்ந்த பீடத்தில் சிறிய அளவில் சிவலிங்கத்தை வைத்து முன்னிரவு தொடங்கி நான்கு ஜாமங்களிலும் சிவ மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் துதித்து பூஜைகள் செய்ய வேண்டும்.

நான்கு கால சிவபூஜையில் அந்தெந்த பூஜைக்கேற்றவாறு வஸ்திரம், மலர்கள், மாலை, நைவேத்தியங்களை சிவ லிங்கத்திற்கு படைத்து பூஜை செய்ய வேண்டும். திரிகரண சுத்தி மற்றும் ஆச்சாரமாக இத்தகைய சிவ பூஜைகளை செய்ய இயலாதவர்கள். சிவாலயங்களில் நடைபெறும் நான்கு கால பூஜைகளில் கலந்துகொண்டு, சிவனை வழிபட்டு சிவனருள் பெறலாம்.

அன்று இரவு முழுவதும் சில சிவன் கோயில்களில் சிவபுராண உபன்யாசம் நடைபெறும். அந்த உபன்யாசத்தை கேட்பதால் புண்ணிய பலன் பெருகும். மேலும் உங்கள் வீட்டிலேயே தேவாரம், திருவாசகம், சிவபுராணம், சிவ ஸ்தோத்திரங்கள் முதலானவற்றைப் படிப்பதோ அல்லது யாரையாவது படிக்கச் சொல்லி கேட்கலாம் அல்லது அமைதியாக சிவ மந்திரங்களை சொல்லி சிவ தியானம் செய்யலாம்.

Image result for sivalingam

இரவு கண்விழிப்பதற்காக சிவ ராத்திரி தினத்தின் பகல் வேளையில் உறங்க கூடாது. மேலும் சிவராத்திரி இரவு கண் விழிக்க வேண்டும் என்பதற்காக தொலைக்காட்சி, கைபேசி போன்ற பொழுது போக்கு சாதனங்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

சிவராத்திரி உபவாசம் என்பது நியதி. உபவாசம் என்ற சொல்லுக்கு சமீபமாக இருத்தல் என்பது பொருள். ஆகவே உடலாலும் மனதாலும் சிவ சிந்தனையுடன் இருந்தால் மட்டுமே சிவராத்திரி தின விரதம் இருந்ததற்கான சிவ பெருமானின் முழுமையான அருளை நாம் பெற முடியும்.

இப்படி முறையாக வழிபடுவதன் மூலம் ஒருவரது மகா சிவராத்திரி விரதம் முழுமையாக நிறைவடையும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் எண்ணிலடங்கா பல அறிய பலன்களை ஒருவர் பெறலாம். மகா சிவராத்திரி விரதம் இருக்கிறேன், சிவ ராத்திரி அன்று கண் விழைகிறேன் என்று கூறிவிட்டு இரவெல்லாம் குடும்ப கதை பேசுவது, சினிமா பார்ப்பது போன்ற செயல்களை செய்வதால் எந்த ஒரு பயனும் பெரிதாக இல்லை என்பதே உண்மை. ஆகையில் மகா சிவராத்திரி அன்று சிவனை முழு மனதோடு வழிபட்டு, சிவபெருமானின் அருளை முழுமையாக பெறுவோம்.

Back to top button