செய்திகள்

‘பறந்துகொண்டிருந்த’ விமானத்திலிருந்து வீழ்ந்த நபர் லண்டன் தோட்டத்தில் சடலமாக மீட்பு!

'பறந்துகொண்டிருந்த' விமானத்திலிருந்து வீழ்ந்த நபர் லண்டன் தோட்டத்தில் சடலமாக மீட்பு! 1

கென்யாவிலிருந்து லண்டனுக்கு பயணமாகிய விமானத்திற்குள் இரகசியமாக நுழைந்து பயணம் செய்துவந்தார் என்று நம்பப்படும் கென்ய நபர் ஒருவர் விமானம் லண்டனுக்குள் பயணம் செய்துகொண்டிருந்த சமயம் விமானத்திலிருந்து தவறி வீழ்ந்து லண்டனிலுள்ள வீட்டுத்தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தமது நாட்டுப்பிரஜை ஒருவர்தான் இந்த சம்பவத்தில் உயிழந்துள்ளார் என்று கென்ய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
நைரோபியிலிருந்து லண்டன் Heathrow விமான நிலையத்தை நோக்கி பறப்பில் ஈடுபட்ட  கென்ய விமானசேவைக்கு சொந்தமான விமானத்தில் – பாதுகாப்பு விதிகளை மீறி – இரகசியமாக ஏறிக்கொண்டார் என்று கூறப்படும் குறிப்பிட்ட நபர், விமானத்தின் அடித்தளத்தில் ஒளிந்துகொண்டு பயணம் செய்திருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 8 மணி 50 நிமிட நேர பறப்பினை அடுத்து விமானம் லண்டனுக்குள் பயணம் செய்துகொண்டிருந்தவேளை தரையிறங்குவதற்காக சிற்களை வெளித்தள்ளியபோது இந்த நபர் கீழே விழுந்திருக்கிறார் என்று நம்பப்படுகிறது.
லண்டன் Clapham பகுதியிலுள்ள வீட்டுத்தோட்டத்தில் வீழ்ந்த நபரின் சடலத்தை கடந்த ஞாயிறன்று மாலை பொலீஸார் மீட்டிருக்கிறார்கள்.
Heathrow விமான நிலையத்தில் வந்திறங்கிய விமானத்தின் அடிப்பகுதியில் குறிப்பிட்ட நபரின் பயணப்பையும் தண்ணீர் போத்தலும் மீட்கப்பட்டதாக விமானப்பணியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Back to top button