செய்திகள்

காணாமல் போன இந்திய விமானப்படையின் விமானம் – தேடும் பணி தீவிரம்

காணாமல் போன இந்திய விமானப்படையின் விமானம் - தேடும் பணி தீவிரம் 1

இந்திய விமானப்படையின் AN 32 விமானம் அசாம் ஜோர்ஹட் தளத்தில் இருந்து 12:25 மணிக்கு புறப்பட்டது.
கடைசியாக 13:00 மணிக்கு கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்த இந்த விமானம் பின்னர் தொடர்பை இழந்தது.
விமானதளத்தை அந்த விமானம் அடையவில்லை என்பதால் இந்திய விமானப்படை இது தொடர்பான விசாரணையை தொடங்கியுள்ளது.
ஐந்து பயணிகள் உள்ளிட்ட எட்டு பேர் அந்த விமானத்தில் இருக்கின்றனர்.
விமானத்தை கண்டுபிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
“காணாமல் போன விமானம் தொடர்பாக இந்திய விமானப்படையின் ஏர் மார்ஷல் ராகேஷ் சிங்கிடம் பேசினேன். அவர் எனக்கு இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.” என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்வீட் செய்துள்ளார்.

Back to top button