செய்திகள்

சிவா இயக்கத்தில் மீண்டும் அஜித்

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில், மீண்டும் நடிகர் அஜித் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அஜித், தற்போது ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்து விட்டு மீண்டும் போனிகபூர் தயாரிக்கும் இன்னொரு படத்திலும், அஜித் நடிக்க உள்ளார். அதன்பிறகு, சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் கூட்டணியில் வீரம், வேதாளம், விவேகம் படங்கள் வந்தன. கடந்த ஜனவரியில் விஸ்வாசம் வெளியானது. இந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்தது. 
சிவா இயக்கத்தில் மீண்டும் அஜித் 1

Back to top button