செய்திகள்
கோடைக்காலத்தில் நிலவும் உடல் உஷ்ணத்தை தணிக்க வேண்டுமா?
இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில், தற்போது அதிக வெப்பமான வானிலை நிலவுவதால், பொது மக்கள் தமது உடல் ஆரோக்கியம் குறித்து மிகுந்த அவதானமாக இருக்க வேண்டும் என, மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த கோடைக் காலத்தில் உடல் அதிக வெப்பத்தை கொண்டிருப்பதால், குளிர்ச்சியான உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இளநீர், பதனீர், மோர் மற்றும் இயற்கையான பழச்சாறுகளை அருந்துவது நன்மை தர வல்லது. இவற்றை அருந்துவதால் உடலுக்கு தேவையான விட்டமின்கள் கிடைப்பதுடன், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்களும் அழிந்து விடும்.
காலை உணவுகளில் பயறு, கடலை, கௌப்பி முதலான தானியங்களை எடுத்துக் கொள்வதுடன், அதிக உஷ்ணத்தை ஏற்படுத்தும் கோழி இறைச்சி, நண்டு, இறால், கணவாய் முதலானவற்றை முற்றிலுமாக தவிர்த்துக் கொள்ள வேண்டும். எனினும் ஆட்டு இறைச்சி அதிக குளிர்மையைத் தருவதால், அதை உட்கொள்ளலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.