செய்திகள்
இந்தியாவின் தாக்குதலும் தாக்கங்களும்!
Thank you : https://www.sbs.com.au
இந்தியாவின் போர் விமானங்கள் எல்லை கடந்து பாகிஸ்தானின் முக்கிய தீவிரவாத முகாம்கள் மீது நேற்று அதிகாலை 3 மணியளவில் இந்தியாவின் 12 மிராஜ் ஜெட் விமானங்கள் எல்லை தாண்டிச்சென்று சுமார் 1000 கிலோ வெடிகுண்டை தீவிரவாதிகள்
முகாம் மீது வீசி முற்றிலுமாக அழித்தன. இதில் பாகிஸ்தானில் இயங்கிய முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்தியாவின் இந்த தாக்குதலில் 300-க்கும் மேற்பட்ட ஆயுததாரிகள் கொல்லப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் இந்த ராணுவ தாக்குதலுக்கு அனைத்து அரசியல் காட்சிகள் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு அளித்துவரும் அதே நேரத்தில், இந்த தாக்குதலின் பின்னணியில் அரசியல் இருக்கிறது என்ற விமர்சங்களும் எழுப்பப்படுகிறது.