செய்திகள்

காஸாவில் தீவிரமாகும் வன்முறை: வான்வழி தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்

தாக்குதலில் உயிரிழந்த 14 மாத குழந்தைபடத்தின் காப்புரிமைNURPHOTOImage captionதாக்குதலில் உயிரிழந்த 14 மாத குழந்தை

Source :- bbc tamil
காஸா பகுதியில் உள்ள ஆயுத குழுவினருக்கும் இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் நடைபெற்று வரும் தாக்குதல், சமீபத்திய ஆண்டுகளில் நிகழ்ந்த வலுவான தாக்குல்களில் ஒன்றாக இருக்கிறது.
இஸ்ரேலிய பிராந்தியத்திற்குள் 450க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை பாலத்தீன போராளிகள் ஏவியுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்ததாக இஸ்ரேல் கூறுகிறது.
அவர்கள் தாக்கியதால், நாங்கள் ஏவுகணைகள் மற்றும் டாங்கிகள் கொண்டு பாலத்தீனத்தை தாக்கினோம் என்கிறார்கள் இஸ்ரேல் ராணுவத்தினர். இத்தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்ததாக பாலத்தீனம் கூறியுள்ளது.
“காஸா பகுதியில் உள்ள தீவிரவாத சக்திகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துமாறு” ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக, இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெத்தன்யாஹு ஞாயிறன்று தெரிவித்தார்.

தாக்குதல்படத்தின் காப்புரிமைJACK GUEZ

ஏப்ரல் மாதம் இஸ்ரேலில் தேர்தல் நடக்க இருக்கும் சூழலில் இரு தரப்புக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால், இந்த தாக்குதல் அமைதி உடன்படிக்கையை மீறி நடந்துள்ளது.

என்ன நடக்கிறது?

இவை அனைத்தும் வெள்ளிக்கிழமை அன்று தொடங்கியது. போராளிகளுக்கு ஆயுதங்கள் எடுத்துச் செல்வதை தடுக்கும் விதமாக குறிப்பிட்ட ஒரு பகுதியை இஸ்ரேல் தடுத்து முற்றுகையிட்டதை எதிர்த்து காஸாவில் போராட்டங்கள் வெடித்தன.
எல்லைப்பகுதியில் பாலத்தீன துப்பாக்கிதாரி ஒருவர் சூட்டதில், இரண்டு இஸ்ரேல் ராணுவத்தினர் சுட்டு காயப்படுத்தப்பட்டனர். பதிலுக்கு இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஆயுதக் குழுவினை சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர்.
சனிக்கிழமை காலையில் இருந்து காஸா ராக்கெட் தாக்குதலை நடத்தியது. இஸ்ரேல் ராணுவம் பல ராக்கெட்டுகளை சுட்டு வீழ்த்தினாலும், அந்நாட்டில் சில கிராமங்களில் உள்ள வீடுகள் தாக்கப்பட்டன.

இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இரண்டு அடுக்குமாடி கட்டடங்கள் சேதப்படுத்தப்பட்டதாக பாலத்தீனம் கூறுகிறது.படத்தின் காப்புரிமைGETTY IMAGESImage captionஇஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இரண்டு அடுக்குமாடி கட்டடங்கள் சேதப்படுத்தப்பட்டதாக பாலத்தீனம் கூறுகிறது.

இதில் ஒருவர் உயிரிழந்தார்.
மேலும் ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிகாத் ஆயுதக் குழுவினரது இடத்தை தாக்கியதில் இரண்டு பாலத்தீன சண்டைக்காரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது.
ஆனால் காஸாவை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ், மொத்தம் நான்கு பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டதாக கூறுகிறது. மேலும் இதில் ஒரு பெண் மற்றும் அவரது 14 மாத குழந்தையும் உயிரிழந்ததாகவும் கூறுகிறது.
ஆனால், தாயும் குழந்தையும் பாலத்தீன ராக்கெட்டுகளால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

Back to top button