செய்திகள்

வேட்டி சட்டையில் பத்மஸ்ரீ விருது பெற்று அசத்திய நடிகர் பிரபுதேவா!

ஆண்டுதோறும் சமூக சேவை, கல்வி, கலை, இலக்கியம், விளையாட்டு ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு, நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான (2019) பத்ம விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடியும் பங்கேற்றார். இதில் பத்ம பூசன் விருதை குடியரசுத்தலைவர் வழங்க மலையாள நடிகர் மோகன்லால் பெற்றுக் கொண்டார். அதேபோல், நடிகர் பிரபுதேவாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. விழாவில் அவர் தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்தபடி அவர் கலந்து கொண்டார்.
மேலும், மேல்மருத்துவத்தூர் பங்காரு அடிகளார், ட்ரம்ஸ் சிவமணி, பாடகர் சங்கர் மகாதேவன், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோருக்கும், பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

New-Project-3-7

Back to top button