செய்திகள்
ரயிலுடன் மோதியது பஸ்; யாழில் சம்பவம்
யாழ் எழுதுமட்டுவால் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு சிறியரக பஸ் விபத்தில் சாரதி படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று காலையில் இடம்பெற்றுள்ளது.
![ரயிலுடன் மோதியது பஸ்; யாழில் சம்பவம் 2](http://cdn.virakesari.lk/uploads/medium/file/88697/999.jpg)
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்தி ரயில், கச்சாய் பகுதியிலிருந்து கொடிகாமம் நோக்கி பயணித்த சிறியரக பயணிகளை ஏற்றும் பஸ்ஸில் மோதியுள்ளது.
![ரயிலுடன் மோதியது பஸ்; யாழில் சம்பவம் 3](http://cdn.virakesari.lk/uploads/medium/file/88696/000__8_.jpg)
இதன்போது குறித்த பஸ் மோசமாக சேதமடைந்துள்ளது. பஸ் சாரதி படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
![ரயிலுடன் மோதியது பஸ்; யாழில் சம்பவம் 4](http://cdn.virakesari.lk/uploads/medium/file/88694/000__7_.jpg)
குறித்த ரயில் கடவையை கடக்க முற்பட்ட போதே குறித்த சம்பவம் இடம்பெற்றள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
![ரயிலுடன் மோதியது பஸ்; யாழில் சம்பவம் 5](http://cdn.virakesari.lk/uploads/medium/file/88692/000__6_.jpg)
![ரயிலுடன் மோதியது பஸ்; யாழில் சம்பவம் 6](http://cdn.virakesari.lk/uploads/medium/file/88690/000__4_.jpg)
![ரயிலுடன் மோதியது பஸ்; யாழில் சம்பவம் 7](http://cdn.virakesari.lk/uploads/medium/file/88689/000__1_.jpg)