செய்திகள்

“இலங்கை குண்டு வெடிப்பை தலைமை தாங்கி நடத்திய சஹ்ரான் ஹாசிம் பலி”

 Source :- https://www.bbc.com/tamil/sri-lanka-48061821

"இலங்கை குண்டு வெடிப்பை தலைமை தாங்கி நடத்திய சஹ்ரான் ஹாசிம் பலி" 1

இலங்கையில் ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் தினத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதலைத் திட்டமிட்டு நடத்திய தேசிய தௌஹீத் ஜமாத் தலைவர் சஹ்ரான் ஹாசிம் ஷாங்ரி லா விடுதியில் நிகழ்த்திய குண்டுவெடிப்பில் இறந்துவிட்டார் என்று இலங்கை ராணுவ உளவுப் பிரிவு இயக்குநரை மேற்கோள் காட்டி பிபிசி சிங்கள சேவை செய்தியாளர் அஸாம் அமீன் ட்வீட் செய்துள்ளார்.
முக்கிய ஊடகவியலாளர்களுடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று வெள்ளிக்கிழமை நடத்திவிரும் சந்திப்பில் ராணுவ உளவுப் பிரிவு இயக்குநர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய 140 பேர் இருப்பதாகவும், அவர்கள் அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் சிறிசேன தெரிவித்தார். இன்னும் 24 மணி நேரத்தில் சிறப்பு அலுவலகம் ஒன்று அமைக்கப்பட்டு தேசிய தௌஹீத் ஜமாத் போன்ற தீவிரவாதத்துடன் தொடர்புடைய அமைப்புகளைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Back to top button