செய்திகள்

கைக்குழந்தையுடன் பணியில் ஈடுபடுட்ட பெண் காவலர் – Chandigarh Traffic Constable with Baby

இந்தியாவில் சண்டிகர் நகரில் பெண் காவலர் ஒருவர் தனது கைக்குழந்தையுடன் பணியில் ஈடுபடும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

சண்டிகர் நகர போக்குவரத்து காவல் பிரிவில் பணியாற்றி வரும் பெண் காவலருக்கு காலை 8 மணி முதல் போக்குவரத்து பணிகளுக்கான நேரமாக வழங்கப்பட்டுள்ளது.

எனினும் அவருக் கைக்குழந்தை இருப்பதால், நேரத்தை மாற்றி கேட்ட போதிலும் உயர் அதிகாரிகள் அந்த கோரிக்கையை நிராகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எனவே அவர் தன் கைக்குழந்தையுடன் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இதன் போது எடுக்கப்பட்ட காணொளியே தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Back to top button