செய்திகள்

வவுனியாவில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – Corona In Vavuniya

வவுனியாவில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் இருந்து அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 24 ஆம் திகதி மரணமடைந்திருந்தார்.

அவருடன் தொடர்புடையவர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கு மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனைகள் முடிவுகள் நேற்று (04.04.2021) இரவு வெளியாகின. அதில் வவுனியா வேப்பங்குளம் பகுதியை சேர்ந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மேலும் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நெடுங்கேணி பகுதியை சேர்ந்த ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர்கள் 8 பேரையும் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தவும் சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Back to top button