செய்திகள்

கொரோனா பீதி ; யாழில் 3 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டனர்

யாழ் மாவட்டத்திலுள்ள கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 3 உத்தியோகத்தர்கள் நேற்று முன்தினம் மாலை தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோப்பாய் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் அண்மையில் வெலிக்கடைச் சிறையில் இருந்து விடுதலையாகி சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

அவருடன் வெலிக்கடை சிறையில் இருந்த சந்தேக நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து வந்த குறித்த நபர் மீண்டும் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட நபரை ஏற்றிச்சென்ற கோப்பாய் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த மூன்று உத்தியோகத்தர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கையில் மேலும் 57 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

நாட்டில் நேற்றைய தினம் 57 புதிய கொரோனா தொற்றார்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் அடையாளப்படுத்தப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 2,511 ஆக அதிகரித்துள்ளது.

இந்த 57 புதிய கொரோனா தொற்றாளர்களில் கந்தக்காடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் 13 பேரும், கைதிகளுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய 30 பேரும் இவ்வாறு நேற்றைய தினம் புதிய கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அது மாத்திரமன்றி ராஜங்கனை பகுதியைச் சேர்ந்த 5 பேரும், வெலிக்கடையைச் சேர்ந்த இருவரும், ஹபரதுவ மற்றும் லங்காபுரவைச் சேர்ந்த தால ஒவ்வொரும் புதிய கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேநேரம் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து நாடு திரும்பிய நான்கு பேரும், இத்தாலியிலிருந்து திரும்பி ஒருவரும் கொரோனா தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டின் ஏழு வைத்தியசாலைகளில் மொத்தமாக 520 கொரேனா தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,980 ஆக உயர்வடைந்துள்ளதுடன், கொரோனா தொற்று சந்தேகத்தின்பேரில் 64 பேர் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Back to top button