செய்திகள்

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளின் செயல்திறன் நம்பிக்கை அளிப்பதாக தகவல்..! -Coronavirus Vaccine Update

moderna, oxford astrazeneca, russia sputnik v, pfizer latest news update

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள சில மருந்துகளின் செயல்திறன் நம்பிக்கை அளிக்கும் வகையில் இருப்பதாக ஆய்வு முடிவுகள் காட்டுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உலகம் முழுவதும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் மருந்துகளை தயாரிக்கும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில்,  இதில் சில முக்கிய நிறுவனங்களின் மருந்துகள் இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளன. சில மருந்துகளின் செயல்திறன் நம்பிக்கை அளிக்கும் வகையில் இருப்பதாக ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.

உலகின் முதல் தடுப்பூசியாக ஸ்புட்னிக்-வி (sputnik V) (ரஷ்யாவின் ஸ்பூட்னிக் கொரோனா வைரஸ் தடுப்பூசி)

ஸ்பூட்னிக் கொரோனா வைரஸ் தடுப்பூசியை ரஷியா உருவாக்கி உள்ளது. இதனை விரைவில் சந்தைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு 10 கோடி டோஸ் என்ற அளவில் இந்த மருந்து உற்பத்தி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மேலும் சில மருந்துகளும் செயல் திறனை நிரூபித்துள்ளன. இந்த நிறுவனங்களின் மருந்துகளை பெறுவதற்காக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கொள்முதல் ஒப்பந்தம் செய்துள்ளன.

இவ்வாறு விரைவில் சந்தைக்கு வருவதற்கு தயாராக உள்ள சில நிறுவனங்களின் மருந்துகள் குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்.

coronavirus vaccine update
MOSCOW, RUSSIA – AUGUST 6, 2020: Ampoules contain a vaccine for COVID-19 developed by Gamaleya Research Institute of Epidemiology and Microbiology under the Russian Healthcare Ministry. A two-component adenoviral vector-based vaccine, Gam-COVID-Vak will be available to public on January 1, 2021. Russian Direct Investment Fund and Gamaleya Research Center/TASS
THIS IMAGE WAS PROVIDED BY A THIRD PARTY. EDITORIAL USE ONLY

 

ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா ஜெனேகா (oxford astrazeneca)

வைரல் வெக்டர் தொழில்நுட்ப அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி 62 முதல் 90 சதவீதம் வரை நோய்த்தடுப்பு திறன் கொண்டது என்று பரிசோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. 2 டோஸ் கொடுத்து நடத்தப்பட்ட சோதனையில் இந்த முடிவுகள் வந்துள்ளன. இந்த மருந்தை குளிர்சாதன பெட்டிகளில் வைத்து பயன்படுத்த முடியும். எனவே இந்த மருந்து சந்தைக்கு வரும்பட்சத்தில் கையாள்வது எளிதாக இருக்கும்.

வைரல் வெக்டர் தொழில்நுட்ப அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி 62 முதல் 90 சதவீதம் வரை நோய்த்தடுப்பு திறன் கொண்டது என்று பரிசோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. 2 டோஸ் கொடுத்து நடத்தப்பட்ட சோதனையில் இந்த முடிவுகள் வந்துள்ளன. இந்த மருந்தை குளிர்சாதன பெட்டிகளில் வைத்து பயன்படுத்த முடியும். எனவே இந்த மருந்து சந்தைக்கு வரும்பட்சத்தில் கையாள்வது எளிதாக இருக்கும்.
An illustration picture shows vials with Covid-19 Vaccine stickers attached and syringes, with the logo of the University of Oxford and its partner British pharmaceutical company AstraZeneca, on November 17, 2020. (Photo by JUSTIN TALLIS / AFP)

மாடர்னா – Coronavirus Vaccine Moderna
மாடர்னா நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியின் 2 டோஸ் அளவு கொடுத்து பரிசோதனை செய்ததில் 95 சதவீதம் பலன் தருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த மருந்து ஆர்.என்.ஏ (மரபணு குறியீட்டின் ஒரு பகுதி) தொழில்நுட்ப அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை பாதுகாப்பது சற்று கடினம். மிகவும் உறைநிலையில் வைக்க வேண்டும். அதாவது மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைத்து பராமரிக்க வேண்டும். உற்பத்தி செய்த 6 மாதங்களுக்குள் மருந்தை பயன்படுத்த வேண்டும்.

Moderna

பைசர்-பயோன்டெக் (pfizer covid vaccine)

பைசர் பயோன்டெக் நிறுவனமும் ஆர்.என்.ஏ தொழில்நுட்ப அடிப்படையில் கொரோனா தடுப்பூசி மருந்தை உருவாக்கி உள்ளது. இந்த மருந்தின் செயல்திறன் 95 சதவீதம் என உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் என்ற உறைநிலையில் வைத்து மருந்தை பாதுகாக்க வேண்டும்.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளின் செயல்திறன் நம்பிக்கை அளிப்பதாக தகவல்..! -Coronavirus Vaccine Update 1

 

Back to top button