செய்திகள்

COVID இரண்டாம் அலைக்கு உக்ரைன் விமானப் பணியாளர்களே காரணம்: ஆய்வில் தெரியவந்துள்ளது

கடந்த வருடம் செப்டம்பர் மாத ஆரம்பத்தில் நாட்டிற்கு வருகை தந்த உக்ரைன் விமானப் பணியாளர்களே இலங்கையில் COVID இரண்டாம் அலை பரவியதற்கான பிரதான காரணம் என சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிரிவு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

அவர்கள் சீதுவையில் அமைந்துள்ள ​ஹோட்டலில் தங்கியிருந்ததாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர ‘டெய்லி மிரர்’ பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார்.

குறித்த விமானப் பணியாளர்கள் நாட்டிலிருந்து வௌியேறுவதற்கு முன்னர் விருந்துபசாரம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் அதில் வௌியிலிருந்தும் ஆட்கள் பங்கேற்றிருந்ததாகவும் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

Source
Newsfirst
Back to top button