செய்திகள்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்வு குறித்து முக்கிய அறிவிப்பு

நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி அதிகாலை 04.00 மணிக்கு நீக்கப்படுமென இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல , ‘ கடந்த வாரம் அறிவிக்கப்பட்டதைப் போன்று ஒக்டோபர் முதலாம் திகதி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்டாலும் அதன் பின்னர் சுகாதார கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இது கட்டுப்பாடுகள் குறித்த விபரம் வெகுவிரைவில் வெளியிடப்படும்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Back to top button