செய்திகள்

Donald Trump India Visit LIVE: அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய வருகை:`நமஸ்தே டிரம்ப்` நிகழ்வு தொடங்கியது

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏர்ஃபோர்ஸ் ஒன் என்ற தனி விமானத்தில் இன்று முற்பகல் 11.40 மணியளவில் இந்தியா வந்தடைந்தார். (Donald Trump India Visit LIVE)

அதிபா் டிரம்புடன், அவரது மனைவி மெலானியா டிரம்ப், மகள் இவாங்கா, மருமகன் ஜேரட் குஷ்னா் ஆகியோரும் வந்துள்ளனா். மேலும், டிரம்ப் நிா்வாகத்தைச் சோ்ந்த அமைச்சா்கள், அதிகாரிகள் அடங்கிய குழுவும் இந்தியா வந்துள்ளது.

அந்தக் குழுவில் அமெரிக்க நிதியமைச்சா் ஸ்டீவன், வா்த்தகத் துறை அமைச்சா் வில்பா் ராஸ், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ராபா்ட் ஓபிரையன், எரிசக்தித் துறை அமைச்சா் டேன் புரூலியெட் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

Presentational grey line
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா வந்தடைந்தார், மோதி வரவேற்றார்படத்தின் காப்புரிமைAFP

1.50 : கேரளாவில் டொனால்ட் டிரம்ப் மற்றும் மோதி ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன.

கேரளாவில் டொனால்ட் டிரம்ப் மற்றும் மோதி ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன.படத்தின் காப்புரிமைGETTY IMAGES

1.43: நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் உரையாற்ற மேடைக்கு வந்த டிரம்ப் மற்றும் மோதி ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டனர். இருநாட்டு தேசிய கீதமும் ஒலிக்கப்பட்டு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

1. 40: மொடெரா அரங்கத்திற்கு வந்த டிரம்பின் மகள் இவான்கா டிரம்புடன் மக்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

1. 35: இன்னும் சற்று நேரத்தில் மொடெரா அரங்கத்தில் நடைபெறும் `நமஸ்தே டிரம்ப்` நிகழ்ச்சியில் உரையாற்றவுள்ளார் டொனால்ட் டிரம்ப்.

இந்த அரங்கத்தில் சுமார் 1.10 லட்சம் பேர அமரலாம். அரங்கம் முழுவதும் மக்கள் நிறைந்திருக்கும் காட்சிகளை தூர்தர்ஷன் நேரலையில் காண முடிகிறது.

Presentational grey line

1.22: “நமஸ்தே டிரம்ப்”

டொனால்ட் டிரம்ப் வரவேற்பு கமிட்டி என்ற ஒரு கமிட்டியே நமஸ்தே டிரம்ப் நிகழ்வை ஒருங்கிணைத்துள்ளது. நான்கு நாட்களுக்கு முன்பு வரை இந்த கமிட்டி குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. நகரின் அனைத்து பகுதிகளிலும், இந்த நிகழ்ச்சி குறித்த பதாகைகள் இருந்தபோதிலும், இதை ஒருகிணைப்பவர்கள் குறித்த எந்த ஒரு தகவலும் இல்லாமல் இருந்தது கேள்விக்குள்ளானது.

இந்த நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு உள்ளதா என்று, அக்கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் திவாரியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, டொனால்ட் டிரம்ப் வரவேற்பு கமிட்டி இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்துகிறது, அவர்கள் எங்களுக்கு அழைப்பு விடுப்பார்களா என்று தெரியவில்லை என அவர் தெரிவித்தார். அப்போதுதான், இந்த கமிட்டியின் பெயரே வெளியே வந்தது.

இதற்கிடையே பலமுறை முயன்றபோதும், இந்த கமிட்டி குறித்த எந்த தகவலும் பிபிசியால் பெற முடியவில்லை.

24 மணிநேரங்களுக்கு முன்புதான், அகமதாபாத் மாநகராட்சி இந்த கமிட்டி உருவாக்கப்பட்டது குறித்த தகவலை வெளியிட்டது. அதன் மேயர், பிஜில் படேல், இந்த கமிட்டியின் தலைவர் தானே என டிவிட்டரில் பதிவிட்டார்.

நிகழ்ச்சியை நடத்துவது இந்த கமிட்டிதான் என்பது இப்போது வெளிவந்த தகவல் என்றாலும், இந்நிகழ்ச்சிக்கு செலவாகும் தொகையை கமிட்டிக்கு அளிப்பது மாநில அரசா, மத்திய அரசா  என்ற எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Presentational grey line

1.20: பிரதமர் மோதி மற்றும் டொனால்ட்  டிரம்ப் மொடெரா அரங்கத்திற்கு வந்தடைந்தனர்.

1.05: நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி நடைபெறவிருக்கும் சர்தார் பட்டேல் அரங்கம்தான் உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் அரங்கமாகும். இதில் சுமார் ஒரு லட்சம் பார்வையாளர்கள் அமரலாம்.

உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் அரங்கம்படத்தின் காப்புரிமை GETTY IMAGES

1.00: சபர்மதி ஆசிரமத்திலிருந்து மொடேரா அரங்கம் செல்லும் வழி நெடுகிலும் டிரம்பை வரவேற்கும் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய வருகை: இன்னும் சில நிமிடங்களில் `நமஸ்தே டிரம்ப்` நிகழ்வு - Liveபடத்தின் காப்புரிமை GETTY IMAGES

12.48: மொடெரா அரங்கத்தில் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் `நமஸ்தே டிரம்ப்` நிகழ்ச்சியை பார்க்க கூடியுள்ளனர் என தூர்தர்ஷன் தொலைக்காட்சி.

12.46: இந்த பயணத்திற்கு மிக்க நன்றி என சபர்மதி ஆசிரமத்தின் வருகை பதிவில் எழுதியுள்ளார் டொனால்ட் டிரம்ப்

12.45: சபர்மதி ஆசிரமத்திலிருந்து மொடெரா அரங்கத்திற்கு புறப்பட்டனர் டிரம்ப் மற்றும் மோதி.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய வருகை: இன்னும் சில நிமிடங்களில் `நமஸ்தே டிரம்ப்` நிகழ்வு - Liveபடத்தின் காப்புரிமை ANI

12.44: அசாம் மாநிலம் கெளஹாத்தியில் டிரம்புக்கு எதிரான பதாகைகளை ஏந்தி ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Donald Trump India Visit LIVE: டிவிட்டரில் டிரெண்டான TrumpinIndia, GoBackTrump ஹாஷ்டேக் #TrumpinIndiaபடத்தின் காப்புரிமை GETTY IMAGES

12. 39: வருகை பதிவேட்டில் தனது கருத்தை பதிந்த டிரம்புக்கு, மகாத்மா காந்தியின் மூன்று குரங்குகள் குறித்து விவரித்தார் பிரதமர் மோதி.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய வருகை: இன்னும் சில நிமிடங்களில் `நமஸ்தே டிரம்ப்` நிகழ்வு - Liveபடத்தின் காப்புரிமைANI

12.35: சபர்மதி ஆசிரமத்தை சுற்றிப் பார்த்த டிரம்ப், அங்குள்ள ராட்டையில் மனைவி மெலானியா டிரம்புடன் நூல் நூற்பது குறித்து கேட்டறிந்தார்.

Donald Trump India Visit LIVE: டிவிட்டரில் டிரெண்டான TrumpinIndia, GoBackTrump ஹாஷ்டேக் #TrumpinIndiaபடத்தின் காப்புரிமை GETTY IMAGES

12.31: சர்வதேச அளவில் #trumpinindia என்ற ஹாஷ்டேக் டிரண்டிங் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. அதேபோல் #GoBackTrump என்ற ஹாஷ்டேகும் டிரண்டாகி வருகிறது.

சர்வதேச அளவில் #trumpinindia என்ற ஹாஷ்டேக் டிரண்டிங் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது.படத்தின் காப்புரிமை TWITTER TRENDS

12. 30: சபர்மதி ஆசிரமம் வந்தடைந்தார் டிரம்ப்

12.20: மொடெரா அரங்க நிகழ்ச்சிக்கு பிறகு ஆக்ராவில் உள்ள தாஜ் மஹாலை பார்வையிடவுள்ளார் டிரம்ப். அதன்பிறகு அங்கிருந்து அவர்கள் டெல்லிக்கு பயணம் மேற்கொள்வர்.

TrumpinIndiaபடத்தின் காப்புரிமை GETTY IMAGES
தாஹ்மஹால் செல்கிறார் டிரம்ப்

12.18: டிரம்ப் மற்றும் மோதி மொடேரா அரங்கத்திற்கு வரவுள்ளனர். அவர்களை காண பெருந்திரளாக கூட்டம் திரண்டுள்ளது என இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

12.15: வழிநெடுகிலும் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதனை ரசித்தப்படியே சபர்மதி ஆசிரமம் செல்கிறார் டிரம்ப்.

12.05: டிரம்ப் மோதிவுடன் சபர்மதி ஆசிரமம் நோக்கி செல்கிறார். இரு பக்கமும் மக்கள் இந்திய தேசிய கொடி மற்றும் அமெரிக்க கொடியை கைகளில் ஏந்தி வரவேற்பு தருகின்றனர்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய வருகை: இன்னும் சில நிமிடங்களில் `நமஸ்தே டிரம்ப்` நிகழ்வுபடத்தின் காப்புரிமை GETTY IMAGES
Presentational grey line

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் 2 நாள் சுற்றுப் பயணமாக திங்கள்கிழமை முதல் முறையாக இந்தியா வந்தார். குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகருக்கு அவா் நேரடியாக வருகை தருவதையொட்டி அந்நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா வந்தடைந்தார்படத்தின் காப்புரிமை GETTY IMAGES

டிரம்பை வரவேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஆமதாபாத் விமான நிலையத்தில் உள்ளார்.

குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்தில் வந்திறங்கிய டொனால்ட் டிரம்ப்பை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்கிறார். அமெரிக்க அதிபரை வரவேற்கும் வகையில் இன்று காலை 10.30 மணியளவில் ஆமதாபாத் சர்வதேச விமான நிலையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை வந்துள்ளார்.

Presentational grey line

‘நமஸ்தே டிரம்ப்’

குஜராத்தின் ஆமதாபாத் நகரத்திற்கு வரும் டிரம்ப், மொடேரா அரங்கத்தில் நடைபெறும் ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

Donald Trump India Visit LIVE: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா வந்தடைந்தார்படத்தின் காப்புரிமை GETTY IMAGES

இப்படியான சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் ஹிந்தியில் டிவீட் செய்துள்ளார். அதாவது, நான் இந்தியா வருகை தர தயாராகிவிட்டேன். இந்தியாவுக்குத்தான் வந்து கொண்டிருக்கிறேன். இன்னும் சில மணி நேரங்களில் அனைவரையும் சந்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

இந்தியாவுக்கான பொருளாதார பயன்

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்பதால் இந்தப் பயணத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. 10 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமானஅளவுக்கு மினி வர்த்தக ஒப்பந்தங்களுக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.

சரி டிரம்பின் வருகையால் இந்தியாவுக்கான பொருளாதார பயன்கள் என்னென்ன?

விரிவாகப் படிக்க:டிரம்ப் வருகையால் பொருளாதார ரீதியாக இந்தியாவுக்கு என்ன லாபம்?

பிரதமர் நரேந்திர மோதி மற்றும் டிரம்ப் ஆகிய இரு தலைவர்களும் விமான நிலையத்திலிருந்து மொடேரா அரங்கம் வரை 22 கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்களை பார்த்து கையசைத்தவாறு செல்ல முடிவு செய்துள்ளனர்.

Presentational grey line

டிரம்பின் இந்த வருகைக்கான செலவு

டிரம்பின் இந்த வருகை பல காரணங்களுக்காக தலைப்புச் செய்தியில் இடம்பிடித்துள்ளது. அதில் ஒன்று, அதற்கான செலவுத் தொகை. இந்த வருகைக்கான ஏற்பாட்டிற்காக 80-85 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Presentational grey line

சுவருக்கு போலீஸ் பாதுகாப்பு

குஜராத்தில் உள்ள ஒரு குடிசைப் பகுதி ஒன்று இந்தியா வரவுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பார்வையில் படாமல் இருக்க, அதை மறைத்து சுவர் எழுப்பப்பட்டது. அந்த சுவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சுவருக்கு போலீஸ் பாதுகாப்பு
Presentational grey line

சாதிக்க நினைப்பது என்ன?

டிரம்பின் இரண்டு நாள் பயணம் அவருடைய ‘பெருமையைக்’ கூட்டுவதற்காக, முக்கியமாக, 2020 அமெரிக்க பொதுத் தேர்தல்களில் மீண்டும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரித்து கொள்வதற்கானதாக திட்டமிடப்பட்டுள்ளது.

Back to top button