செய்திகள்

கண்டி மாவட்ட பாடசாலைகள் மேலும் ஒரு வாரத்திற்கு பூட்டு

கண்டி மாவட்ட பாடசாலைகள் அனைத்தும் மேலும் ஒரு வாரத்திற்கு மூடப்படுமென மத்திய மாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக நாட்டின் பல பகுதிகளில் பாடசாலைகள் மூடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கண்டி நகர எல்லைக்குட்பட்ட 45 பாடசாலைகளும் அக்குரன பகுதியில் உள்ள 5 பாடசாலைகளும் மூடப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 14 ஆம் திகதிவரை மூடப்படும் மத்திய மாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.

Source : virakesari

Back to top button