செய்திகள்

நாட்டை முடக்குவதா, இல்லையா? – ஜனாதிபதி தலைமையில் இன்று விசேட கலந்துரையாடல் – Lockdown in sri lanka

நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்பான தற்போதைய நிலைமைகள் குறித்து விவாதிக்க ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் இன்று ஒரு முக்கிய கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. 

கொவிட்-19 தொற்றால் நாளாந்த நோயாளர்களது எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகளின் அதிகரிப்பு வேகம் ஆகியவற்றை கருத்திற் கொண்டே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

வைரஸ் வேகமாக பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய முடக்கலுக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்துள்ளன, மேலும் அது தொடர்பில் இன்றைய கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Source : virakesari.lk

Back to top button