செய்திகள்

M. A. சுமந்திரனின் STF பாதுகாப்பு திடீர் நீக்கம்…!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எமது செய்திச் சேவைக்கு இதனை உறுதிப்படுத்தினார்.

தமக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு நேற்றிரவு முதல் நீக்கப்பட்டதாகவும், எனினும், அதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

கடந்த 2014ஆம் ஆண்டில் அவருக்குக் கொலை அச்சறுத்தல் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இது தொடர்பில் 30 இற்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டிப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்றைய தினம் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம் நிறைவடைந்த நிலையில், அவருக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட திடீர் ஆட்சிமாற்ற காலத்திலும், விசேட அரதிரடிப்படை பாதுகாப்பு நீக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தின் தலையீட்டை அடுத்து மீண்டும் விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

தற்போது மீண்டும் அந்தப் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ள நிலையில், அது சம்பந்தமாகத் தாம் அதிகாரிகளை அணுகவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

Back to top button