செய்திகள்

செப்டம்பர் மாதத்தில் சவாலை சந்திக்கபோகும் அந்த ராசியினர்கள் யார்? – ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 13 வரை – monthly rasi palan september

மேஷம்: குழம்பிக்கொண்டிருந்த விஷயத்தில் தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். உறவினர், பழைய தோழிகளுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கி உழைத்தாலும் அதற்கேற்ற அங்கீகாரமோ, பாராட்டுகளோ இல்லையே எனப் புலம்புவீர்கள். இங்கிதமான பேச்சால் சாதிக்கும் நேரமிது.

ரிஷபம்: எதிர்ப்புகள் அடங்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. வீடு வாங்குவீர்கள். கணவரின் ரசனையைப் புரிந்து நடந்துகொள்வீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் பொறுப்பாக இருப்பார்கள். அரசாங்க விஷயம் சுமுகமாக முடியும். வழக்கில் திருப்பம் ஏற்படும். நண்பர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். தோழிகளால் உதவிகள் உண்டு. மாமியார் உங்களின் புதுத் திட்டங்களை வரவேற்பார். பயணங்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் தேவையறிந்து கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் கடின உழைப்பால் அதிகாரியின் மனதில் இடம் பிடிப்பீர்கள். நினைத்ததை நடத்திக் காட்டும் நேரமிது.

மிதுனம்: உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். வீடு வாங்க, கட்ட வங்கிக் கடன் உதவி கிடைக்கும். இங்கிதமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். கணவர் உங்களின் தியாகத்தை மதிப்பார். மகளின் பிடிவாதம் தளரும். மகனுக்கு வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் நல்ல வேலை அமையும். அரசால் ஆதாயம் உண்டு. பழைய உறவினர், தோழிகள் தேடி வந்து பேசுவார்கள். விலையுயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்துக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்திக் கட்ட முடிவெடுப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமையை மூத்த அதிகாரி பாராட்டுவார். பிற்பகுதியில் முன்னேறும் நேரமிது.

கடகம்: எடுத்த வேலையை முடிக்காமல் ஓயமாட்டீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். கணவர் உங்கள் புது முயற்சிக்குப் பக்கபலமாக இருப்பார். புதிய வாகனம் வாங்குவீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். பள்ளிப் பருவத் தோழிகளைச் சந்தித்து மகிழ்வீர்கள். அவ்வப்போது முன்கோபம், மன இறுக்கம், சிறுசிறு விபத்துகள் வந்து செல்லும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள். சகோதரர்கள் கோபப்படுவார்கள். மாமனார், மாமியார் ஏதேனும் குறை கூறினாலும் அதைப் பெரிதாக்க வேண்டாம். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளை விமர்சனம் செய்யாதீர்கள். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நேரமிது.

சிம்மம்: தொட்ட காரியம் துலங்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவரின் அறிமுகம் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவர் உங்களைப் புரிந்துகொண்டாலும், வெளிப்படையாகப் பாராட்ட மாட்டார். பிள்ளைகளின் திருமணம், உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் பலிதமாகும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். இங்கிதமான பேச்சால் மாமனார், மாமியாரைக் கவர்வீர்கள். திடீர்ப் பயணங்கள், சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து செல்லும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ற பொருள்களைக் கொள்முதல் செய்து லாபத்தைப் பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். அடுத்தடுத்த செலவுகளால் திணறும் நேரமிது.

கன்னி: எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். வழக்கு சாதகமாகும். கணவர் அதிசயிக்கும்படி நடந்துகொள்வீர்கள். பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். புது பொறுப்புகள், பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சகோதரிக்கு இருந்த பிரச்னையைத் தீர்த்து வைப்பீர்கள். மச்சினருக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் கமிஷன், புரோக்கரேஜ் வகையால் லாபம் வரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். புதிய நட்பால் நிம்மதி பெறும் நேரமிது.

துலாம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். புதிய யோசனைகள் பிறக்கும். உறவினர், தோழிகள் வீட்டு விசேஷத்தை முன்னின்று நடத்துவீர்கள். புதிய வேலை கிடைக்கும். கணவரிடம் கலந்தாலோசித்து செலவுகளைக் குறைப்பீர்கள். நகர எல்லைக்குள் வீடு வாங்குவீர்கள். வங்கியில் அடமானமாக வைத்திருந்த வீட்டுப் பத்திரத்தை மீட்பீர்கள். பிள்ளைகளின் அடிமனதிலிருக்கும் பயத்தைப் போக்குவீர்கள். திடீரென்று அறிமுகமாகிறவர்களை வீட்டுக்குள் அழைத்து வர வேண்டாம். வியாபாரத்தில் வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் சொந்த விஷயங்களை உங்களிடம் சொல்லி ஆறுதல் அடைவார்கள். தடைகள் நீங்கும் நேரமிது.

விருச்சிகம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். அயல்நாட்டில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உங்களின் நிர்வாகத்திறன் அதிகரிக்கும். கணவரை அவர் போக்கில் சென்று மாற்றுவீர்கள். உங்களைத் தாழ்த்திப் பேசியவர்களின் மனசு மாறும். வீடு, வாகனம் வாங்க லோன் கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். நாத்தனார், மச்சினர் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. எந்த விஷயமாக இருந்தாலும் நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளுடன் விவாதங்கள் வரும். வேலைச்சுமையும் இருக்கும். செல்வாக்கு கூடும் நேரமிது.

தனுசு: வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். பிரபலங்களின் உதவியால் சில விஷயங்களை சாதிப்பீர்கள். கணவர் வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்வார். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். உறவினர், தோழிகள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். திட்டமிட்ட காரியங்கள் முடியும். பணவரவு அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். அரசால் அனுகூலம் உண்டு. சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். வியாபாரம் சுமார்தான். போட்டிகளால் விழி பிதுங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களுடைய திறமையை மேலும் அதிகரித்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். சவால்களில் வெற்றி பெறும் நேரமிது.

மகரம்: உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். பணவரவு திருப்தி தரும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். மாமியார், நாத்தனார் கனிவாக நடந்துகொள்வார்கள். கணவர் கடிந்துகொள்வார். உங்கள் பங்குக்கு நீங்களும் கோபப்பட்டு எதையாவது சொல்லி வைக்காதீர்கள். ஒரு சொத்தைக் காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும். சிறு சிறு அவமானம் ஏற்படக்கூடும். சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். சகிப்புத் தன்மையால் முன்னேறும் நேரமிது.

கும்பம்: உங்கள் பலம் பலவீனத்தை உணருவீர்கள். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். தன்னிச்சை யாகச் சில முடிவுகள் எடுப்பீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். மாமனார், மாமியார் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். சகோதரர்கள் மதிப்பார்கள். கணவருக்கு வேலைச்சுமையால் மன இறுக்கம் வந்து செல்லும். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகின்றன என்பதை அறிந்து புது முடிவு எடுப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். எதிர்பாராத திருப்பங்கள் சூழும் நேரமிது.

மீனம்: உற்சாகமாகச் செயல்படுவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். உறவினர், தோழிகளுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். வீட்டைப் புதுப்பிப்பீர்கள். சவாலில் வெற்றி பெறுவீர்கள். ஆட்சியாளர் அறிமுகமாவார். பூர்வீகச் சொத்தைச் சீர் செய்வீர்கள். ஆன்மிகப் பெரியோரை சந்தித்து ஆசி பெறுவீர்கள். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். வழக்கில் நல்ல திருப்பம் ஏற்படும். அரசாங்க விஷயங்கள் உடனே முடியும். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளைத் தவிர்த்துவிடுங்கள். உத்தியோகத்தில் இருந்து வந்த இழுபறி நிலை மாறும். நாவடக்கம் தேவைப்படும் நேரமிது.

Back to top button