செய்திகள்

எரிபொருள் விலை அதிகரிப்பு – Revision of fuel prices

எரிபொருட்களின் விலைகள் இன்று இரவு (11.06.2021) முதல் அதிகரிக்கப்படுவதாக எரி சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) தீர்மானித்துள்ளது.

இதன்படி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 92 ஒக்டெய்ன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 20 ரூபாவாலும் 95 ஒக்டெய்ன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 23 ரூபாவாலும் ஓட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலையை 7 ரூபாவாலும் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலையை 12 ரூபாவாலும் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலையை 7 ரூபாவாலும் அதிகரிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி ஒரு லீற்றர் ஒக்டேன் 92 பெற்றோலின் விலை 157 ரூபாவாகவும் ஒரு லீற்றர் ஒக்டேன் 95 பெற்றோலின் விலை 184 ரூபாவாகவும் ஒரு லீற்றர் டீசல் 111 ரூபாவாகவும் ஒரு லீற்றர் சுப்பர் டீசல் 144 ரூபாவாகவும் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 77 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.

Revision of fuel prices
Revision of fuel prices

இதேவேளை, லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருட்களின் விலைகளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் (சிபெட்கோ) விலைகளுக்கு ஏற்ப அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button