செய்திகள்

ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு பாடசாலை ஆரம்பிப்பது தொடர்பான அறிவித்தல் – Sri Lanka School Open Date Update

இவ்வருடம் தரம் 1 மாணவர்கள் பெப்ரவரி மாத்தின் இரண்டாவது வாரத்தில் இணைத்துக்கொள்ளப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலைகளில்,

தரம் 02 முதல் தரம் 13 வரை கல்வி நடவடிக்கைகள் இம் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

அதேவேளை பெப்ரவரி மாதத்தின் இரண்டாவது வாரத்தில் தரம் 1 மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக குறிப்பிட்டார்.

அத்துடன் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார வழிகாட்டுதல்கள் அடங்கிய சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளதா கல்வி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

இவ் சுகாதார வழிகாட்டுதல்கள் தொடர்பில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடுமாறு அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.

Source
Tamilvalam
Back to top button