செய்திகள்

பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு! (காணொளி) -sri lanka school reopen date 2021

பாடசாலைகளை மீள திறப்பது குறித்த அறிவித்தலை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இன்று விடுத்துள்ளார்.

இதற்கமைய, சுகாதாரத் துறையினரின் அனுமதியின்கீழ், 100 இற்கும் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை, இந்த மாதத்திற்குள் திறப்பது குறித்து அவதானம் செலுத்துவதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், ஆசிரியர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் அடுத்து வாரம் ஆரம்பமாகவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Source : Hiru news

Back to top button