செய்திகள்
Trending

பாடசாலைகளை மூடுவது தொடர்பான தீர்மானம் எடுப்பதானால் அமைச்சர் அறிவிப்பார் – School open date

நாட்டில் தற்போது காணப்படுகின்ற கொவிட் நிலைமைகளை அவதானித்து பாடசாலை செயற்பாடுகளில் மாற்று தீர்மானங்கள் எடுக்கப்படுமா இல்லையா என்பது தொடர்பில் கல்வி அமைச்சரால் அறிவிக்கப்படும் என்று  கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

நாளை செவ்வாய்கிழமை பல்கலைக்கழங்களை மீள திறக்க தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் , இரு வாரங்கள் அதனை ஒத்தி வைப்பதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. 

அவ்வாறெனில் பாடசாலைகள் குறித்தும் மாற்று தீர்மானங்கள் எடுக்கப்படுமா என்று வினவிய போதே பேராசிரியர் கபில பெரேரா இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் 16 பல்கலைகழங்கள் காணப்படுகின்றன. அவற்றில் மொரட்டுவை பல்கலைகழகத்தில் மாத்திரமே மாணவிகளுக்கான விடுதி காணப்படுகிறது. 

ஏனையோர் வெவ்வேறு பகுதிகளிலேயே தங்கியுள்ளனர். இவ்வாறு வெவ்வேறு  இடங்களிலிருந்தும் பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் செல்வார்களாயின் அது அச்சுறுத்தலாகும். எனவே தான் அவற்றை அடுத்த இரு வாரங்களுக்கும் திறக்காமலிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

ஆனால் பெரும்பாலான பாடசாலை மாணவர்கள் தத்தமது வீடுகளிலிருந்தே செல்கின்றனர். எவ்வாறிருப்பினும் நாட்டில் தற்போதுள்ள நிலைவரத்தை மதிப்பீடு செய்து , பாடசாலை செயற்பாடுகளில் ஏதேனும் மாற்றுத் தீர்மானங்கள் எடுப்பதாக இருந்தால் கல்வி அமைச்சர் அதனை அறிவிப்பார் என்றார்.

Back to top button