செய்திகள்

மீனத்தில் சஞ்சரிக்கும் சூரிய பகவான்.. இந்த 4 ராசிக்கும் காத்திருக்கும் அதிர்ஷ்ட யோகம் என்ன?- Suriya peyarchi 2021

மார்ச் 14-ம் தேதி சூரிய பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.

தமிழ் பஞ்சாங்கத்தில் சூரியன் ஒவ்வொரு ராசியில் சஞ்சரிப்பதை ஒவ்வொரு தமிழ் மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

அந்த வகையில் மீன ராசியில் சூரியன் இருக்கும் காலத்தை பங்குனி மாதம் என அழைக்கப்படுகிறது.

ரிஷபம்

ரிஷப ராசிக்கு 11-ம் இடத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் பல்வேறு வகையில் அனுகூலமான பலன்கள் பெறுவீர்கள். இந்த மாதத்தில் உங்களின் எதிரிகளை எளிதில் வெல்லக்கூடியதாக இருக்கும்.

தொழில், வணிகத்தில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளும், சாதகமான பலன்களும் கிடைக்கும். உங்களின் வளமும், சக்தியும் அதிகரிக்கும்.

மேலும், உங்களின் எதிர்கால முன்னேற்றத்தைக் கொடுக்கக்கூடிய சில நிகழ்வுகள் நடக்கும். அரசு சார்ந்த உங்களின் வேலை சிறப்பாக நிறைவேற நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது.

மிதுனம்

மிதுன ராசிக்கு 10-ம் இடமான தொழில் ஸ்தானத்தில் சூரியனின் சஞ்சாரம் நிகழ்கிறது. அதோடு புதன் பகவானின் நட்பு கிரகம் சூரியன் என்பதால் உங்களின் தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைத்தளவு லாபங்களைப் பெறுவீர்கள்.

எந்தப் பணியை கையில் எடுத்தாலும், அதை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள், இதன் காரணமாக உங்கள் மதிப்பு, மரியாதையும் அதிகரிக்கும்

அரசு ஊழியர்களுக்கு நேரம் சாதகமானதாகவும் மற்றும் சலுகைகள் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்த மாதத்தில் உடன்பிறந்தவர்களின் முழு ஆதரவும் இருக்கும், உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நீங்கள் விரும்பியது போல நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.

கடகம்

கடக ராசியினர்கள், சூரியனின் நட்பு கிரகமான சந்திரன் ஆளக்கூடிய கடக ராசிக்கு செல்வத்தை, நிதி நிலைமையை உயர்த்தக்கூடிய அமைப்பாக இருக்கும்.

மேலும், ராசிக்கு 9ம் இடத்தில் பாக்கிய ஸ்தானத்தில் அமைந்திருப்பதால், உங்களின் ஆளுமை கூடும்.

அரசு வகையிலான அனுகூலங்கள் சிறப்பாக நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்களின் மதிப்பும், கெளரவமும் அதிகரிக்கும்.

உங்களின் செல்வத்தின் தேடலுக்கான முயற்சியில் விரும்பியது போலவே நிலைமை சாதகமாக அமையும்.

உங்களின் வசதி, வாய்ப்புகள் பெருகும். குடும்பத்தில் நிம்மதியும், மகிழ்ச்சிகரமான காரியங்கள் நடக்கலாம்.

மீனம்

மீன ராசியில், சூரியன் சஞ்சரிக்கக்கூடிய இந்த பங்குனி மாதத்திலுங்களுக்கு பல்வேறு வகையில் சில சாதகமான மாற்றங்கள் தரும்.

இது உங்கள் பாணியை மேம்படுத்தும். சொத்து தொடர்பான விஷயங்களில் திடீர் நன்மை ஏற்படும் மற்றும் சொத்து தொடர்பான பிரச்னைகள் நீங்கி லாபம் பெறக்கூடியதாக இருக்கும்.

வணிக வளர்ச்சிக்கு, நீங்கள் எடுக்கும் புதிய விஷயங்கள் சாதக பலனைத் தரக்கூடும்.

Back to top button