செய்திகள்

வடக்கின் போர் துடுப்பாட்ட போட்டி ஜூன் 3ஆம் திகதி ஆரம்பம் – The battle of the north

Story Highlights
  • The Battle of the North is an annual cricket match played between Jaffna Central College and St. John's College, Jaffna, two schools in northern Sri Lanka.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையில் “வடக்கின் போர்” என அழைக்கப்படும் 115ஆவது ஆண்டு இன்னிங்ஸ் துடுப்பாட்ட போட்டி எதிர்வரும் ஜூன் 3,4 மற்றும் 5ஆம் திகதிகளில் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் அனுமதியுடன் இந்தப் போட்டி இடம்பெறும் என யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிபர், கலாநிதி எஸ்.கே.எழில்வேந்தன் அறிவித்துள்ளார். போட்டி நடைபெறும் மைதானம் மற்றும் அதன் சூழலுக்குள் பாடசாலையைச் சேர்ந்தோர் அனுமதிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

the battle of the north
the battle of the north

இரண்டு பாடசாலைகளின் அதிபர்கள், பிரதி அதிபர்கள், உப அதிபர்கள், விளையாட்டுத்துறை பொறுப்பு ஆசிரியர்கள், இரண்டு அணிகளினதும் பொறுப்பு ஆசிரியர்கள், பயிற்றுவிப்பாளர்கள், அணி வீரர்கள், நடுவர்கள், போட்டி நடுவர்கள், வர்ணனையாளர்கள், பெறுபேற்றுப் பலகை கணிப்பீட்டாளர்கள், பொலிஸ், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், அனுசரனையாளர்கள், மைதான பராமரிப்பாளர்கள் மற்றும் இரண்டு பாடசாலைகளின் மாணவர் தலைவர்கள் தலா 20 பேர், சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் தொண்டர்கள் தலா 5 பேர் மட்டுமே மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

போட்டி நேரலை ஒளிபரப்பு உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசைகளில் இடம்பெறும்.

அத்துடன், இரு பாடசாலை அணிகளுக்கும் இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்கள் ஒருநாள் போட்டி யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் ஜூன் 12ஆம் திகதி இடம்பெறும் என்றும் மத்திய கல்லூரி அதிபர் அறிவித்துள்ளார்.

Back to top button