செய்திகள்

இனி பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படுமா? – இராணுவ தளபதி விளக்கம் – travel restrictions update

எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படாது என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் உண்மைக்குப் புறம்பானது என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எமது செய்திப் பிரிவுக்கு வழங்கிய தொலைபேசி ஊடான செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நாளாந்தம் பதிவாகும் கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை மற்றும் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு பயணக்கட்டுப்பாடு விதிப்பது தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும்.

இனிவரும் நாட்களில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட மாட்டாது என பரவும் செய்திகளில் உண்மை இல்லை என இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Source : Hiru news

Back to top button