செய்திகள்

உலகிற்கு குழந்தையை அறிமுகப்படுத்திய இளவரசர் ஹரி – மேகன் தம்பதி (Video)

இங்கிலாந்து அரசக் குடும்பத்தில் இளவரசர் ஹரிக்கும் அவர் மனைவி மேகன் மார்க்லேவுக்கும் திங்கட்கிழமை ஆண் குழந்தைப் பிறந்தது.குழந்தைக்கு ஆர்ச்சி ஹரிசன் மவுன்ட் பேட்டன் வின்ட்சர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
நேற்று, இளவரசர் ஹரியும் மேகனும் தங்கள் குழந்தையை வெளியுலகத்துக்கு முதல் முறையாக அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அது தொடர்பான வீடியோவில், மேகன், “உலகின் சிறந்த இரண்டு ஆண்கள் என்னிடம் இருக்கிறார்கள். நான் மிகுந்த சந்தோஷமாக இருக்கிறேன். என் மகன் மிக அமைதியாக இருக்கிறான்” என்று சிரித்தபடியே சொல்ல, ஹரியோ “அந்த அமைதி யாரிடமிருந்து வந்தது என்று தெரியவில்லையே” என்று மனைவியைச் செல்லமாக கேலி செய்கிறார்.

அத்தோடு தம்பி ஹரிக்கு குழந்தைப் பிறந்த சந்தோஷத்தில் இருக்கும் அண்ணன் இளவரசர் வில்லியம் தன் தம்பியிடம்,’தூக்கமில்லாத உலகத்துக்கு உங்களையும் வரவேற்கிறோம். அதுதான் குழந்தை வளர்ப்பு’ என்று ஜோக் அடித்திருப்பதும் அரச தம்பதியினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. 
உலகிற்கு குழந்தையை அறிமுகப்படுத்திய இளவரசர் ஹரி - மேகன் தம்பதி (Video) 1

Back to top button