செய்திகள்

வாக்குப்பதிவினை வழங்க சைக்கிளில் வந்த விஜய் – வைரலாகும் புகைப்படம்!! – Vijay arrives on a bicycle

சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவை செலுத்த சைக்கிளில் வந்து ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார் நடிகர் விஜய்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில், திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.


இந்த நிலையில், நடிகர் அஜித், தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்து வாக்களித்திருந்தார்கள். அதேபோல் சூர்யா, கார்த்தி ஆகியோரும் வாக்களித்திருந்தனர். தற்போது நடிகர் விஜய், நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் சென்று தனது வாக்கைப் பதிவு செய்திருக்கின்றார்.

விஜய் சைக்கிளில் வந்து வாக்கினை செலுத்தியது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது

Back to top button