செய்திகள்

தனிமைப்படுத்தல் தளர்வு தொடர்பான புதிய அறிவிப்பு!

கொழும்பு மாவட்டத்தின் மட்டக்குளி, புறக்கோட்டை மற்றும் கரையோரப் பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டமானது நாளை அதிகாலை 5.00 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

எனினும் மட்டக்குளி பொலிஸ் பிரிவிலுள்ள ரந்திய உயன, பெர்குசன் வீதி தெற்கு, லக்சந்தா சேவனா வீட்டு திட்டங்கள் மற்றும் வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவில் உள்ள சாலமுல்ல, விஜயபுர கிராம சேவகர் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும்.

இதேவேளை கம்பஹா மாவட்டத்தின் நீர்கொழும்பு மற்றும் ராகம பொலிஸ் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டம் நாளை அதிகாலை 5.00 மணிக்கு நீக்கப்படும்.

இந் நிலையில் வத்தளை, பேலியாகொட மற்றும் களனி ஆகிய பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் சட்டம் அமுலில் இருக்கும் என்று இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தின் மோதரை, புளுமெண்டல், கொட்டாஞ்சேனை, ஆட்டுப்பட்டித்தெரு, கிராண்ட்பாஸ், டாம் வீதி, வாழைத்தோட்டம், மாளிகாவத்தை, தெமட்டகொடை, மருதானை, வேகந்த மற்றும் வனாத்தமுல்லை கிராம சேவகர் பிரிவுகள் உள்ளிட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தல் சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

களுத்துறை மாவட்டத்தின் அட்டுளுகம கிழக்கு, எபிட்டமுல்ல மற்றும் மெதிரிய கிராம சேவகர் பிரிவுகளும், கண்டி மாவட்டத்தின் புளுகஹதென்ன மற்றும் தெலம்புகஹவத்த ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும், அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் உள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் வெரலபட, வெரலபட வடக்கு மற்றும் தெற்கு, எகொடவத்த, குருசபடுவ ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் உள்ளன.

Back to top button