செய்திகள்

பயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு

கொரோனா அச்சுறுத்தலையடுத்து  நாட்டில் தற்போது அமுலில்  உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14 ஆம் திகதி தளர்த்தப்படமாட்டாதென தெரிவித்திருக்கும் இராணுவத் தளபதி குறித்த பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21 ஆம் திகதி அதிகாலை 4  மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் அமுலாக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14 ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் நீக்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டது.

எனினும், கொரோனா பரவல் நிலைமை அதிகரித்து வருகின்றமையால் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் பரவலின் தீவிர நிலையைக் கருத்திற் கொண்டு போக்குவரத்து கட்டுப்பாடுகளை மேலும் ஒரு வார காலத்திற்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டது.

எவ்வாறிருப்பினும் ஏற்கனவே போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த போது அத்தியாவசிய சேவைகளை முன்னெடுத்தமையைப் போன்று தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடியும்.

எனினும் வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்.

எனவே எதிர்வரும் 21 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை போக்குவரத்து கட்டுப்பாடுகளை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

Back to top button