இந்தியாவில் இனங்காணப்பட்ட இரண்டாவது கொரோனா வைரஸ் நோயாளி!
இந்தியாவில் இரண்டாவது கொரோனா வைரஸ் நோயாளியொருவர், கேரளாவில் இனங்காணப்பட்டுள்ளார் என இந்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸை பரப்பியது அமெரிக்காவா?
கொரோனா வைரஸை தடுக்க முடியுமா? – நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை
இந்தியாவில் கடந்த வியாழக்கிழமை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதல் நபர் கேரளாவில் இனங்காணப்பட்டுள்ளதாக உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது இரண்டாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன் சீனாவின் வுஹான் நகரில் பல்கலைக்கழக மருத்துவ மாணவர் 9 பேருக்கு கொரோனா வைரஸிற்கான அறிகுறிகள் உள்ளதாக சந்தேகிக்கப்பட்டதையடுத்து இவர்களை தனிமையில் வைத்து பரிசோதனை செய்து வந்துள்ள வைத்தியர்கள் இன்று இரண்டாவது நபரொருவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்துள்ளனர்.
மேலும், இவர் ஜனவரி 24 ஆம் திகதி சீனாவிலிருந்து கேரளா திரும்பியதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பெங்களூரில் மேலும் மூன்று பேருக்கு இந்த வைரஸ் இருப்பதாக அச்சம் எழுந்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவின் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் பெரும் பதற்ற நிலை எழுந்துள்ளது.
இதனையடுத்து சீனாவுக்கு வெளியே 27 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 159 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் சீனாவுக்கு வெளியே பிலிபெயின்ஸில் பதிவான இறப்புடன் இறப்புகளின் எண்ணிக்கை 305 ஆக உயர்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸை பரப்பியது அமெரிக்காவா?
கொரோனா வைரஸை தடுக்க முடியுமா? – நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை
Sources : virakesari