செய்திகள்

முதல் முறையாக சங்காவுக்கு கிடைத்த வாய்ப்பு

லண்டனில் அமைந்துள்ள மேரிலெபோன் கிரிக்கட் கழகத்தின் ( MARYLEBONE CRICKET CLUB) தலைவராக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார். 


முதல் முறையாக சங்காவுக்கு கிடைத்த வாய்ப்பு 1

பிரிட்டன் குடியுரிமை இல்லாத ஒருவரை அந்தக் கழகத்தின் தலைவராக நியமிப்பது இதுவே முதன்முறையாகுமென சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
குமார் சங்கக்காரவின் பதவிக்காலம் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி ஆரம்பமாகி ஒரு வருடத்துக்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
மேரிலெபோன் கிரிக்கெட் கழகத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் இன்று (01) லோட்ஸில் இடம்பெற்றது. இதன்போது தற்போதைய தலைவர் அந்தோனி ரைபோர்ட், கழகத்தின் அடுத்த தலைவராக குமார் சங்கக்காரவை அறிவித்தார். 
உலக கிரிக்கெட்டின் முதுகெலும்பு என வர்ணிக்கப்படும் எம்.சி.சி, கிரிக்கெட் விதிமுறைகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Back to top button