செய்திகள்

ஐபிஎல்-யின் தொடக்கத்திலேயே களமிறங்கும் ஸ்மித்-வார்னர்! உற்சாகத்தில் ரசிகர்கள்

அவுஸ்திரேலிய வீரர்களான ஸ்மித், வார்னர் இருவரும் ஓர் ஆண்டு தடை முடிவடைவதற்கு முன்பே, ஐ.பி.எல் போட்டிகளின் ஆரம்பத்திலேயே கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், அவுஸ்திரேலிய வீரர்களான கேப்டன் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் பான்கிராஃப்ட் சிக்கினர்.

பின்னர் அவர்களில் பான்கிராஃப்டுக்கு 9 மாதங்களும், ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓர் ஆண்டும் தடை விதிக்கப்பட்டது. பான்கிராஃப்டுக்கு ஏற்கனவே தடைக்காலம் முடிவடைந்துவிட்ட நிலையில், தொடர்ந்து டி20 லீக் போட்டிகளில் விளையாட மூன்று பேருக்கும் கிரிக்கெட் அவுஸ்திரேலியா அனுமதி அளித்தது.

ஆனால், ஸ்மித்-வார்னர் இருவரும் முழங்கையில் காயம் ஏற்பட்டது காரணமாக விளையாடாமல் இருந்தனர். இந்நிலையில், இவர்களின் தடைக்காலமும் வரும் 28ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.
எனினும், மார்ச் 23ஆம் திகதி முதல் தொடங்கவுள்ள ஐ.பி.எல் போட்டியில் இருவரும் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஓர் ஆண்டு தடைக்காலம் என்பது சர்வதேச போட்டிகளுக்கு மட்டும்தான் என்ற போதிலும், கடந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டியில் விளையாட இவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் தான் இவர்கள் மீண்டும் ஐ.பி.எல்-யில் களமிறங்க உள்ளார்கள். ஸ்மித் ராஜஸ்தான் அணிக்காகவும், வார்னர் ஹைதராபாத் அணிக்காகவும் விளையாட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது அந்தந்த ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Image result for IPl

Back to top button