செய்திகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் யார் அந்த மாப்பிள்ளை?

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள “மாப்பிள்ளை” புகைப்படம் சமூவலைதளங்களில் வைரலாகியுள்ளது
அவர் பதிவிட்டுள்ள புகைப்படத்தில், முகம் முழுவதும் பூக்களால் மறைக்கப்பட்ட ஒரு சென்னை வீரரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அத்துடன், சென்னை அணியில் திருமணம் செய்துள்ள இவர் யார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனைப்பார்த்த பலரும் ஒவ்வொரு வீரரின் பெயர்களை பதிவிட்டு வருகின்றனர். இதில், மேற்கிந்திய வீரர் பிராவோவின் தலை கெட்டப்பை வைத்து, அது அவர்தான் என கண்டுபிடித்துவிட்டனர் ரசிகர்கள்.
ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரின் 12-வது சீசன் வரும் 23-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது.
முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Back to top button