செய்திகள்

பிறப்பு, இறப்பு, விவாகப் பதிவு சான்றிதழ்களை விரைவாகப் பெற புதிய வசதி! – Get register of births deaths and marriages online srilanka

பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவு சான்றிதழ்களின் பிரதிகளை பெற்றுக்கொள்வதற்காக, நிகழ்நிலை (ஒன்லைன்) ஊடாக விண்ணப்பிப்பதற்கான வசதியை தலைமை பதிவாளர் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் ஆகஸ்ட் 4 ஆம் திகதி முதல் பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களை ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் அல்லது இணையவசதி கொண்ட கணினி ஊடாக சமர்ப்பிக்க முடியும்.

விண்ணப்பங்களுக்கான கட்டணங்களை வரவட்டை அல்லது கடனட்டை மூலமாக செலுத்துவதற்கான வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த பின்னர் பயனாளர் வழங்கும் தொலைபேசி இலக்கம் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு கட்டணங்கள் செலுத்துவதற்கான இணைப்பு அனுப்பப்படும்.

Get register of births deaths and marriages online srilanka
Get register of births deaths and marriages online srilanka

அந்த இணைப்பின் ஊடாக பயனாளர் விரும்பும் பிரதிக்கான கட்டணங்களை செலுத்த முடியும்.

விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்ட சான்றிதழ்களை நேரடியாகவோ அல்லது விரைவுத் தபால் மூலமாகவோ பெற்றுக்கொள்வதற்கான வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த வசதியின் ஊடாக நேர விரயத்தை தவிர்த்துக் கொள்ள முடிவதோடு வீட்டிலிருந்தவாறே தங்களுடைய சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளவும் முடியும்.

கீழுள்ள  தலைமை பதிவாளர் திணைக்களத்தின் இணைய முகவரி ஊடாக  பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவு சான்றிதழ்களின் பிரதிகளை பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்க முடியும்.

https://online.ebmd.rgd.gov.lk/

Back to top button