செய்திகள்

நாட்டில் அதிரடியாக முடக்கப்படுகிறது சில பகுதிகள் ! – Sri lanka Covid Latest Status

கொரோனா அச்சுறுத்தல் நிலையையடுத்து நாட்டின் சில பகுதிகள் இன்று திங்கட்கிழமை இரவு 08.00 மணி முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, கம்பஹாவில் கொட்டதெனியாவ, பொல்ஹேன, ஹீரிலுகெந்தர, களுஹக்கலை ஆகிய கிராம சேவகசர்கள் பிரிவு இன்று இரவு 08.00 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

மினுவாங்கொடயில் அஸ்வென்னவத்த கிழக்கு கிராம சேவகர் பிரிவு இன்று இரவு 08.00 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளன. 

களுத்துறை மாவட்டத்தில் மீகஹதென்ன பொலிஸ் பிரிவு, மிரிஸ்வத்த, பெலவத்த கிழக்கு கிராம சேவகர் பிரிவு ஆகியன இன்று இரவு 08.00 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை பொலிஸ் பிரிவு, பூம்புகார் ஆகியன இன்று இரவு 08.00  மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளன. 

இதேவேளை, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் இன்று இரவு 08.00  மணி முதல் எதிர்வரும் 2 வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

மேல், வடமேல் மாகாண பாடசாலைகளுக்கு பூட்டு

Sri lanka Covid Latest Status
Sri Lanka Covid Latest Status

உடன் அமுலுக்கு வரும் வகையில் மேல், வடமேல் மாகாண பாடசாலைகளை மூடுமாறு கல்வியமைச்சு அறிவித்துள்ளது. 

கொரோனா அச்சுறுத்தலை அடுத்து மேல் மற்றும் வடமேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகள், பாலர் பாடசாலைகள் மற்றும் அறநெறி பாடசாலைகளை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மூடப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பாடசாலைகளை மூடுவது தொடர்பான தீர்மானம் எடுப்பதானால் அமைச்சர் அறிவிப்பார்

Source : virakesari

Back to top button