செய்திகள்

அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவு !

அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவருக்கும் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக டெனால்ட் ட்ரம்புக்கும் இடையிலான கடுமையான போட்டியில் ஜோ பைடன் 284 ‘எலக்ட்டோரல் கொலேஜ்’ உறுப்பினர்களின் ஆதரவுகளை பெற்றுள்ளார்.

டொனலட் ட்ரம்ப் 214  ‘எலக்ட்டோரல் கொலேஜ்’ உறுப்பினர்களின் ஆதரவுகளை பெற்றுள்ளார்.

அமெரிக்க தேர்தல் முறைக்கமைய 270 ‘எலக்ட்டோரல் கொலேஜ்’ உறுப்பினர்களின் ஆதரவுகளை பெறுபவர் ஜனாதிபதியாக பதிவியேற்கும் தகுதி உடையவர்.

அந்தவகையில் 284 ‘எலக்ட்டோரல் கொலேஜ்’ உறுப்பினர்களின் ஆதரவுகளை பெற்ற ஜோ பைடன் அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக அமெரிக்க மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் 3 ஆம் திகதி அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்ற நிலையில் வாக்கெண்ணும் பணியில் பெரும் இழுபறி நிலவி வந்தது.

வாக்கெண்ணும் பணியில் குழப்பங்கள் நிலவுவதாக டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியதுடன் நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

இவ்வாறு இழுபறிக்கு மத்தியில் இறுதியாக வெளியாகிய பென்சில்வேனியாவை வெற்றிபெற்றுள்ளதன் மூலம் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button