செய்திகள்

பகுதி I – நீரிழிவு நோய் (Diabetes) என்றால் என்ன மற்றும் நீரிழிவு நோயின் அறிகுறிகள்

குருதியில் குளுக்கோஸ் (சீனியினளவு) மட்டம் அதிகரிக்கும் போது நீரிழிவு நோய் நிலைமை ஏற்படுகின்றது. குளுக்கோஸ் என்பது குருதியில் காணப்படும் பிரதான சீனி வகையை சேர்ந்தது. உடலின் சக்தியைத் தரும் பிரதான வளமாகும். நாங்கள் உண்ணும் உணவின் மூலம் குளுக்கோஸ் உடலில் சேர்கின்றது. மேலும் ஈரலில் இருந்தும் தசைகளில் இருந்தும் குருதியில் குளுக்கோஸ் சேர்கின்றது. சக்தியைக் கலங்களில் உருவாக்குவதற்காக குளுக்கோஸ் உடலின் பல்வேறு
கலங்களுக்கும் கடத்தப்படுகின்றது.

பகுதி I - நீரிழிவு நோய் (Diabetes) என்றால் என்ன மற்றும் நீரிழிவு நோயின் அறிகுறிகள் 1

சதையி எனும் சுரப்பி உறுப்பானது இரப்பையிற்கும் முண்ணாணுக்கும் இடையில் காணப்படுகின்றது. சமிபாட்டிற்கு தேவையான நொதியங்களை சுரப்பதுடன் இன்சுலின் எனும் ஓமோனையும் சுரக்கின்றது.

உடற்கலங்கள் யாவற்றிற்கும் குளுக்கோசை கடத்துவதற்கு இன்சுலின் எனும் ஓமோன் உதவுகின்றது. சில நேரங்களில் போதியளவு இன்சுலின் உடலில் சுரக்காத காரணத்தினாலோ அல்லது இன்சுலின் சரியாக தொழிற்படாத காரணத்தினாலோ குருதியில் குளுக்கோஸ் மட்டம் அதிகரிப்பதுடன் குளுக்கோஸ் கலங்களினுள் செல்லமுடியாத நிலை ஏற்படுகின்றது.

இவ்வாறு குருதியில் குளுக்கோஸ் மட்டம் அளவுக்கு அதிகமாகும் போது நீரிழிவோ அல்லது நீரிழிவிற்கு முந்திய நிலையோ ஏற்படலாம். தொடர்ந்தும் குருதியில் குளுக்கோஸ் மட்டம் உயர்வாக காணப்படும் போது உடலில் குருதியின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்படும்.



நீரிழிவிற்கு முந்திய நிலை

நீரிழிவிற்கு முந்திய நிலை என்பது குருதியில் குளுக்கோஸ் அளவு சாதாரண அளவைவிடக் கூடியதாகக் காணப்பட்டாலும் “நீரிழிவு நோய்” என்று கூறும் அளவுக்கு குருதியில் குளுக்கோஸ் காணப்படாத தன்மை “நீரிழிவுக்கு முந்திய நிலையாகக் கருதப்படும். இந்நிலையின் முதலில் Type-2 நீரிழிவை அடைய முடிகின்றது. இதயநோய்கள் மற்றும் பாரிசவாதம் வருவதற்குரிய வாய்ப்புக்கள்
அதிகமாக உள்ளது. நிறையை குறைப்பதன் மூலமோ அல்லது நடுத்தரமான உடற்பயிற்சியின் மூலமோ Type-2 நீரிழிவு நோய் ஏற்படுவதை தாமதிக்கவோ அல்லது பாதுகாப்பை பெறவோ முடியும். மருந்து மாத்திரையைப் பயன்படுத்தாமலே நீரிழிவுக்கு முந்திய Type -2 நிலையை தவிர்க்கமுடியும்.




நீரிழிவு நோயின் குணங்குறிகளும் அறிகுறிகளும்

Type-2 நீரிழிவின் அறிகுறிகள் மிகவும் மெதுவாகவே தோன்றுகின்றன. இது வருடக்கணக்காக கூட இருக்கலாம் வரையறுக்கமுடியாது.

நீரிழிவு நோயின் அறிகுறிகளாவன
தாகம் அதிகரிப்பதோடு, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலைமை ஏற்படும். மேலதிக குளுக்கோஸ் காரணமாக குருதியினுள் உடலின் இழையங்களிலிருந்து நீர் குருதியினுள் விடுவிக்கப்படும். இந்நிலைமை தாகத்தை ஏற்படுத்தக்கூடும். இதனால் வழமைக்கு மாறாக நீர் அருந்துவதையும் சிறுநீர் கழிக்கும் நிலைமை ஏற்படுத்தும்.

1. அதிக பசியாக காணப்படும் (Very hungry)

இன்சுலின் இன்மையால் சீனிகுளுக்கோஸ் உடற் கலங்களினுள் செல்ல முடியாத நிலை ஏற்படுவதனால் தசையும் உடல் உறுப்புக்களும் போதிய சக்தியை உருவாக்க முடிவதில்லை. இந்த நிலை பசியைத் தூண்டும்.

2. உடல் நிறை குறையும்

வழமைக்கு மாறாக அதிகமாக பசிக்கும். கலங்களுக்கு தேவையான குளுக்கோசை பசிக்கும் அளவிற்கேற்ப வழமைக்கு மாறாக அதிகளவு உணவு உட்கொள்ளத் துாண்டும். மேலும் அனுசேபத்திற்குத் தேவையான எரிபொருளான குளுக்கோஸ் கலங்களுக்கு குருதியில் இருந்து கிடைக்காத காரணத்தால் தசைகளிலும், கொழுப்புகளிலும் சேமிக்கப்பட்ட உணவு பயன்படுத்தப்படும். இதனால் உடல் மெலிவு, நிறைக்குறைவு ஏற்படும்.

3. இலகுவில் களைப்படைதல்

கலங்களால் குளுக்கோஸை குருதியில் இருந்து பெறமுடியாத நிலை ஏற்படும் போது இலகுவில் களைப்படைவதுடன் அசௌகரியமாகவும் காணப்படும்.

4. கண் பார்வை மங்கலடையும் (Blurry vision)

குருதியில் குளுக்கோஸ் அதிகரிக்கும் போது கண்ணின் வில்லைப் பகுதியை அண்டிய திரவங்கள் குருதியை நோக்கி தள்ளப்படுவதனால் கண்வில்லையினால் இலகுவில் தெளிவான விம்பத்தை பெறுவதற்காக சரியான குவியத்தூரத்திற்கு மாறமுடிவதில்லை.

5. கருந்தழும்பான தோல் தோன்றுதல்

Type 2 நீரிழிவு நோயாளிகளில் கடும் நிறத்தில் தோலில் அடையாளம் தோன்றும்.குறிப்பாக கழுத்திலும் இகக்கத்திலும் தோன்றும். இது அக்கந்தோஸிஸ் நிக்கிறிகன்ஸ் (Acanthosis nigricans) எனப்படும். இது இன்சுலின் ஓமோனுக்கு நிரோதித்தல் அல்லது தடையான காரணியாக இருக்கலாம்.

நோயுடையவர்களில் மேற்படி அடையாளங்கள் தோன்றுவதில்லை. வைத்தியரின் ஆலோசனைப்படி குருதியைப் பரிசோதிக்கும் போது மாத்திரம் இந்நோய் கண்டுபிடிக்கப்படும்.

6.அதிக தாகம் (Very thirsty)

7. நித்திரைக் குறைவு (Sleepy)

8. வழமைக்கு மாறாக அடிக்கடி சிறுநீர்கழிக்க வேண்டிய உணர்வு (Needing to pass urine
more often than usual)

9. இலகுவில் நோய்த் தொற்றுக்குள்ளாதல் காயங்கள் இலகுவில் மாறாத தன்மை (Infections or injuries heal more slowly than usual)

10. உலர்ந்த தோலின் தன்மை (Dry skin)

அடுத்த பதிவில் பயன்தரும் உணவுகள் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றிய பதிவுகளை எதிர்பாருங்கள்.


பகுதி I - நீரிழிவு நோய் (Diabetes) என்றால் என்ன மற்றும் நீரிழிவு நோயின் அறிகுறிகள் 2

Back to top button