செய்திகள்

இன்றைய நாள் (07.05.2019)

உன் மனம் ஒன்றே உன்னை வீழ்த்தக்கூடிய ஒரே ஆயுதம். அதுதெளிவாக இருக்கும் வரையில் நீ ஒருவராலும் வீழ்த்தப்படுவதில்லை: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (07.05.2019 )…!

07.05.2019 ஸ்ரீ விகாரி வருடம் சித்­திரை மாதம் 24 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை. 
சுக்­கில பட்ச திரி­தியை திதி பின்­னி­ரவு 3.02 வரை. அதன்மேல் சதுர்த்தி திதி. ரோகிணி நட்­சத்­திரம் மாலை 5.10 வரை. பின்னர் மிருக சீரிஷம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை திரி­தியை. அமிர்­த­சித்­த­யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் அனுஷம், கேட்டை. சுப­நே­ரங்கள்: பகல் 11.15–12.00. மாலை 4.30–5.30 ராகு­காலம் 3.00–4.30. எம­கண்டம் 9.00–10.30. குளி­கை­காலம் 12.00–1.30 வார­சூலம் – வடக்கு (பரி­காரம்– பால்). 
மேடம் : அன்பு, இரக்கம்
இடபம் : நலம், ஆரோக்­கியம்
மிதுனம் : ஊக்கம், உயர்வு
கடகம் : புகழ், பெருமை
சிம்மம் : லாபம், லஷ்­மீ­கரம்  
கன்னி : புகழ், செல்­வாக்கு 
துலாம் : சலனம், சஞ்­சலம் 
விருச்­சிகம் : மகிழ்ச்சி, சந்­தோஷம்
தனுசு : கவனம், எச்­ச­ரிக்கை
மகரம் : மறதி, விரயம்
கும்பம் : இன்பம், மகிழ்ச்சி
மீனம் : அன்பு, இரக்கம்
அட்­சய திரி­தியை தான தரு­மங்கள் செய்­யவும். புண்­ணி­யங்கள் பெருகும். கிரு­த­யு­காதி, பல­ராம ஜெயந்தி. ரோகிணி நட்­சத்­திர தின­மான இன்று கோவர்­தன கிரி­தா­ரி­யான, துவா­ரகா புரி வாச­னான கண்­ணனை வழி­பட கவ­லைகள் விலகும். மங்­கை­யர்­க­ர­சியார் குரு­பூஜை. சோழ­நாட்டு பழை­யா­ரையில் அவ­த­ரித்­தவர். பாண்­டிய நாட்டு மன்னன் கூன்­பாண்­டி­யனை மணந்து திரு­ஞான சம்­பந்தர் திரு­நீற்­ற­ருளால் கூன்­பாண்­டி­யனை நின்ற சீர் நெடு­மா­ற­னாக்­கிய சிறப்­பினர். பாண்­டிய நாட்டில் சமண சமய இருள் நீக்கிச் சைவ சமய ஒளி பரப்­பி­யவர். திரு­ஞா­ன­சம்­பந்தர் திரு­வருள் பெற்­றவர். (“அதிர்ஷ்ட தேவி அருள் செய்தால், அறி­வி­லி­களைத் தவிர வேறு யாரும் அவ­ளுடன் கொஞ்சிக் குலாவ மாட்­டார்கள்” – ட்ரைடன்) கேது, சுக்­கிரன் கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.
அதிர்ஷ்ட எண்கள்: 2–6
பொருந்தா எண்:     8
அதிர்ஷ்ட  வர்ணங்கள்: வெளிர் மஞ் சள், அடர் பச்சை
இராமரத்தினம் ஜோதி 
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)
இன்றைய நாள் (07.05.2019) 1

Back to top button