செய்திகள்

Tamil Nadu Election 2021 Update : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு – 10 முக்கிய தகவல்கள்

வாக்களிக்க செல்கிறீர்களா இந்த பத்து தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.

  • தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளத்திற்கான சட்டமன்றத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. மேற்கு வங்கம் மற்றும் அசாமில் இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
  • தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 234 தொகுதிகளில் 3,998 பேர் வேட்பாளர்களாக களம் காணுகின்றனர். இதில் 3,585 பேர் ஆண்கள், 411 பேர் பெண்கள், 2 பேர் மூன்றாம் பாலினத்தவர்.
  • தமிழ்நாட்டில் மொத்த வாக்களர்களின் எண்ணிக்கை 6,28,69,955 பேர்.
  • நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் நடைபெறும் இந்த தேர்தல் முடிவுகள் மே 2ஆம் தேதி வெளியாகும்.
  • வாக்காளர் அட்டையை தவிர 11 அடையாள ஆவணங்களைப் பயன்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. அவற்றில் ஆதார் அட்டை , பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை அடங்கும்.
  • கொரோனா காலம் என்பதால் முகக் கவசம் அணிவதும், ஆறு அடி சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் அவசியம்.
  • வாக்காளர்கள் அனைவரின் உடல் வெப்ப நிலையும் பரிசோதனை செய்யப்படும்.
  • கோவிட்-19 தொற்றுள்ளவர்கள் வாக்களிக்க மாலை 6 மணியில் இருந்து 7 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பு அங்கி அணிந்து வாக்களிக்க வேண்டும்.
  • பூத் ஸ்லிப்பை ஆன்லைனில் நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம். https://electoralsearch.in/ தளத்திற்கு சென்று உங்கள் விவரங்களை கொண்டோ அல்லது வாக்காளர் அட்டை எண் கொண்டோ உங்கள் பூத் ஸ்லிப்பை பார்க்கலாம் அதை நீங்கள் பிரிண்ட் அவுட்டும் எடுத்துக் கொள்ளலாம்.
  • வாக்களிக்கச் செல்லும் முன் நீங்கள் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் வலைத்தளத்திற்குள் சென்று உங்கள் தொகுதியில் யார், யார் போட்டியிடுகிறார்கள் என்பதை முழுவதுமாகத் தெரிந்து கொள்ளலாம். நீங்கள் வாக்களிக்க செல்லும் முன் இந்தத் தகவல் உங்களுக்கு பயனளிக்கலாம்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்களிப்பது எப்படி? வாக்குச்சாவடியில் என்ன நடைமுறைகள்?

அதிசார குருப்பெயர்ச்சி பலன்கள்.. மிக கவனத்துடன் இருக்க வேண்டிய 5 ராசியினர்கள்

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. கோடிக் கணக்கானோர் தங்களின் வாக்குகளை பதிவு செய்ய தயாராகி வருகின்றனர்.

அவ்வாறு தயாராகி வருவோரில் நீங்களும் இருந்தால், நீங்கள் சில தகவல்களை அறிய வேண்டும்.

முதலில் அறிய வேண்டியவை…

உங்களுக்கு எத்தனை வயது? குறைந்தது 18 வயதானவராக நீங்கள் இருக்க வேண்டும். வாக்களிப்பவராக நீங்கள் உங்களை பதிவு செய்திருந்தால் நீங்கள் வாக்களிக்கும் நிலையத்திற்கு செல்லலாம்.

வாக்குச் சாவடியை சென்றடைந்தவுடன், சிறிய குழுக்களாக நீங்கள் உள்ளே அனுப்பப்படுவீர்கள்.

கொரோனா காலம் என்பதால் முகக் கவசம் அணிவதும், ஆறு அடி சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் அவசியம்.

வாக்காளர்கள் அனைவரின் உடல் வெப்ப நிலையும் பரிசோதனை செய்யப்படும். ஒருவேளை உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தாலோ, கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டாலோ கோவிட்-19 தொற்றுள்ளவர்கள் வாக்களிக்க ஒதுக்கப்பட்டுள்ள நேரமான மாலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் வந்து வாக்களிக்குமாறு தேர்தல் பணியில் உள்ள அலுவலர்கள் உங்களைக் கேட்டுக்கொள்ளவும் வாய்ப்புள்ளது.

உங்களுடைய முறை வருகிறபோது, உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போட், பேன் கார்டு, ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம், வங்கிக் கணக்கு புத்தகம் அல்லது அரசாங்கம் வழங்கிய, புகைப்படத்துடன் கூடிய ஏதாவது ஒரு அடையாள அட்டை ஆகியவற்றை பயன்படுத்தி நீங்கள் வாக்களிக்கலாம். வாக்குச்சாவடியில் உள்ள தேர்தல் அலுவலர் ஒருவர் உங்களின் அடையாளத்தை சரிபார்ப்பார்.

இரண்டாவது அலுவலர் அழிந்துவிடாத மை கொண்டு உங்கள் விரலில் அடையாளம் வைப்பார்.

இதற்கு பிறகு, வாக்காளர் பதிவேட்டில், நீங்கள் கையெழுத்திட வேண்டும். இரண்டாவது வாக்குப்பதிவு அலுவலர் உங்களுக்கு கையெழுத்திடப்பட்ட வாக்காளர் சீட்டை வழங்குவார்.

மூன்றாவது அலுவலர் உங்கள் வாக்காளர் சீட்டை பெற்றுக்கொண்டு, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் கட்டுப்பாட்டு பொத்தானை அழுத்துவார்.

இப்போது உங்கள் வாக்கைப் பதிவு செய்ய நீங்கள் தயாராகி விட்டீர்கள்.

பின்னர், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் வாக்களிக்கும் அலகு வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு நீங்கள் செல்வீர்கள்.

கூட்டத்தை குறைக்கும் நோக்கிலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவைப்படும் கூடுதல் நேரத்தை ஈடுகட்டவும், இந்த முறை வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது என்கிறது இந்திய தேர்தல் ஆணையம்.

Tamil Nadu Election 2021 Update

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் வாக்களிக்கும் அலகு என்றால் என்ன? – Tamil Nadu Election 2021 Update

தேர்தலில் போட்டியிடும் அந்தந்த தொகுதி வேட்பாளர்களின் பெயர்களும், அந்த பெயர்களுக்கு அருகில் அவர்களின் சின்னங்களும் வரிசையாக இந்த எந்திரத்தில் இருக்கும்.

வேட்பாளர்களின் பெயர் அந்த தொகுதியின் பெரும்பான்மையினர் பேசுகின்ற மொழிகளில் எழுதப்பட்டிருக்கும்.

எழுத்தறிவில்லாத வேட்பாளருக்கு உதவும் வகையில் வேட்பாளர் பெயருக்குப் பக்கத்தில் அவரது அல்லது அவரது கட்சியின் சின்னம் இடம் பெற்றிருக்கும்.

நீங்கள் வாக்குப் பதிவு செய்யத் தயாராக இருக்கும்போது, நீங்கள் விரும்பும் வேட்பாளருக்கு அடுத்ததாக இருக்கும் நீல நிற பொத்தானை ஒரு முறை அழுத்தவும்.

இதைச் செய்தவுடன் வாக்கு பதிவாகிவிட்டது என்று பொருளாகாது.

‘பீப்’ என்ற சத்தம் கேட்டு, அந்த எந்திரத்தின் விளக்கு அணைந்தால்தான் நீங்கள் வாக்களித்து விட்டீர்கள் என்று பொருள்.

இப்போது நீங்கள் வாக்களித்துவிட்டீர்கள்.

அந்த மின்னணு வாக்குப்பதிவுஇயந்திரத்திலுள்ள வாக்குப் பதிவை முடிப்பதற்கான பொத்தானை அலுவலர்கள் அழுத்தினால்தான், மேலதிக வாக்குகள் பதிவாவது நிறுத்தப்படும்.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேட்டைத் தவிர்க்க, இது முத்திரையிட்டு மூடப்பட்டிருக்கும். தேர்தல் ஆணையத்தின் பாதுகாப்பான பட்டையால் சுற்றப்பட்டு, வரிசை எண்ணும் கொடுக்கப்பட்டிருக்கும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போதுதான் இது திறக்கப்படும்.

Tamil Nadu Election 2021 Update

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 2ஆம் தேதி என்ன நடக்கும்?

வாக்கு எண்ணிக்கை நாளில், எண்ணிக்கை தொடங்கும் முன்னால், மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் அனைத்தும், வாக்கு எண்ணிக்கை நடத்தும் ஊழியர்கள் மற்றும் முகர்வகளால் தனித்தனியாக ஆய்வு செய்யப்படும்.

இதனை தேர்தல் நடத்தும் அலுவலர் மேற்பார்வை செய்வார்.

வாக்குப்பதிவு எந்திரத்தில் சேதம் எதுவும் ஏற்படவில்லை அந்த அலுவலர் திருப்தியடைந்தால், முடிவுகளைக் காட்டுவதற்கான பொத்தானை அவர் அழுத்துவார். அப்போது வேட்பாளர்களின் முகவர்களும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருப்பார்கள்.

ஒவ்வொரு வேட்பாளருக்கும் எதிராக கட்டுப்பாட்டு அலகில் பதிவாகியுள்ள வாக்குகளின் எண்ணிக்கையை இந்த அலுவலர் ஆய்வு செய்வார்.

திருப்பதியடைந்தால், அவர் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அடங்கிய ஆவணத்தில் கையெழுத்திட்டு, தேர்தல் ஆணையத்தோடு பகிர்ந்து கொள்வார்.

அந்தந்த வாக்கு எண்ணிக்கை மையங்களில் இருக்கும் மின்னணு திரைகளிலும் இந்த முடிவுகள் காட்டப்படும்.

இறுதி முடிவுகள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.

வாழ்த்துகள்! உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தேர்தல் செயல்முறையில் நீங்கள் பங்கேற்றிருக்கிறீர்கள்.

Source BBC

Back to top button