செய்திகள்

”வீணாக பதற்றமடையாமல் அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள்”: எவ்வாறு எம்மை பாதுகாத்துக்கொள்வது?

சீனாவில் ஆரம்­ப­மான கொரோனா வைரஸ் தொற்று நோயின் தாக்கம்  முழு உல­கையும் ஆட்­டிப்­ப­டைத்­துக்­கொண்­டுள்ள சூழலில்  இலங்­கை­யிலும் இந்த வைரஸ் தொற்றின் அபாயம்  குறிப்­பி­டத்­தக்­க­வ­கையில் அதி­க­ரித்­துள்­ள­துடன்   மேலும் பரவும்  அபா­யத்தைக் கொண்­டி­ருப்­ப­தா­கவும்   சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது. இதனால்  அனைத்து மக்­களும்   இது­தொ­டர்­பான  விழிப்­பு­ணர்­வுடன் செயற்­ப­டு­வது அவ­சியம்  என்­ப­துடன்   சரி­யான முறையில் சுகா­தார அறி­வு­றுத்­தல்­களை   பின்­பற்­ற­வேண்­டு­மென்றும்   அறி­வு­றுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.

தற்­போ­தைய சூழலில் இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் இரு­வ­ருக்கு கொரோனா வைரஸ் தொற்­றி­யுள்­ளமை  பரி­சோ­த­னைகள் மூலம் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.   அவர்கள் இரு­வரும்   கொழும்பு ஐ.டி.எச். மருத்­து­வ­ம­னையில்  தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு    தொடர் சிகிச்­சைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர்.  அதே­போன்று   இரண்டு  வெளி­நாட்­ட­வர்­க­ளுடன்   64  பேர்   கொரோனா வைரஸ் ஏற்­பட்­டி­ருக்­குேமா என்ற சந்­தே­கத்தில் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட அவ­தா­னிப்­புக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றனர்.  இவர்கள் அனை­வரும் நாட­ளா­விய ரீதியில்  பல மருத்­து­வ­ம­னை­களில் இவ்­வாறு  அவ­தா­னிப்­புக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர்.

அதே­போன்று  இத்­தாலி, தென்­கொ­ரியா, ஈரான் ஆகிய நாடு­க­ளி­லி­ருந்து இலங்கை திரும்­பிய மொத்­த­மாக 1100 பேர்  பற்றிகலோ கம்பஸ் மற்றும்  கந்­த­க்காடு பகு­தி­களில் அமைக்­கப்­பட்­டுள்ள தற்­கா­லிக  அவ­தா­னிப்பு நிலை­யங்­களில் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு  கண்­கா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றனர்.   நாட­ளா­விய ரீதியில் 14 வைத்­தி­ய­சா­லைகள்   இந்த  கொரோனா வைரஸ் நோயா­ளர்கள் என  சந்­தே­கிக்­கப்­ப­டு­கின்­ற­வர்­களை பரி­சோ­தனை செய்­வ­தற்­காக    தயா­ராக  வைக்­கப்­பட்­டுள்­ளன.

இந்த நிலையில்  தற்­போது இலங்­கையில் இரு­வ­ருக்கு  கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்­பட்­டுள்­ளதன் கார­ண­மாக அதனைத் தடுக்கும் நோக்கில் அல்­லது  அதி­லி­ருந்து தம்மை  மக்கள் பாது­காத்­துக்­கொள்ளும்  நோக்கில் பல்­வேறு முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் எடுத்­தி­ருக்­கி­றது.  மிக முக்­கி­ய­மாக  தற்­போது புதிய  சில ஏற்­பா­டுகள்  மிக வேக­மாக எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன.  விமான நிலை­யங்­களில்  பரி­சோ­தனை நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.  இத்­தாலி, தென்­கொ­ரியா, ஈரான் ஆகிய நாடு­க­ளு­ட­னான  விமான போக்­கு­வ­ரத்­துக்கள்   நிறுத்­தப்­பட்­டுள்­ளன.  ஏனைய  விமான   சேவை நிறு­வ­னங்­க­ளுக்கும்   இத்­தாலி, தென்­கொ­ரியா, ஈரா­னி­லி­ருந்து  எந்­த­வொரு பய­ணி­யையும்  இலங்­கைக்கு அழைத்­து­வ­ர­வேண்டாம் என  விமான சேவைகள் அதி­கார சபை அறி­வித்­தி­ருக்­கி­றது.  உலகின் அனைத்து  விமான  சேவை நிறு­வ­னங்­க­ளுக்கும் இந்த  அறி­வித்தல் சென்­றுள்­ளது. இந்த  நடை­முறை  இன்று 14  ஆம் திக­தி­முதல் அமு­லுக்கு வரு­கி­றது.

விமான பய­ணங்கள்
ஏற்­க­னவே  இத்­தாலி, தென்­கொ­ரியா,  ஈரான் ஆகிய நாடு­க­ளி­லி­ருந்து வரு­கின்ற பய­ணி­களை தனி­மைப்­ப­டுத்தி 14 நாட்கள் கண்­கா­ணிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருந்த சூழலில் தற்­போது   அந்த நாடு­க­ளி­லி­ருந்­தான விமான  பய­ணங்கள் இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ள­துடன்  அந்த நாட்டு பய­ணி­களை    வேறு  விமா­ன­சேவை   நிறு­வ­னங்­களும் இலங்­கைக்கு அழைத்து வரக்­கூ­டாது என அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

இது இவ்­வா­றி­ருக்க இலங்­கையில்   நேற்­று­முதல்  தனியார் மற்றும் அரச  பாட­சா­லை­க­ளுக்­கு­ வி­டு­முறை வழங்­கப்­பட்­டுள்­ளது.  ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி  வரை இவ்­வாறு விடு­முறை வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது.   அது­மட்­டு­மன்றி இலங்­கையில்  பல்­வேறு நாடு­க­ளுக்­கு­ வ­ழங்­கப்­பட்டு வந்த வருகை தரு விசா நடை­முறை   நிறு­தப்­பட்­டி­ருக்­கி­றது.   இவ்­வாறு  பல்­வேறு நட­வ­டிக்­கைகள்  முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. எனினும்  கடந்த சில தினங்­க­ளாக சீனா­வி­லி­ருந்து  இலங்­கைக்கு வருகை தந்­த­வர்கள் விமான நிலை­யத்தில்   பரி­சோ­திக்­கப்­ப­ட­வில்லை என்ற குற்­றச்­சாட்டை எதிர்க்­கட்­சிகள்  முன்­வைத்­துள்­ளன. அதற்கு அர­சாங்கம்  விளக்­க­ம­ளித்­துள்­ளது. அதா­வது   அந்த நாட்­டி­லி­ருந்து தற்­போது  இந்த வைரஸ் பர­வு­வ­தற்­கான  அபாயம் குறை­வாக இருப்­ப­தாக  அர­சாங்கம் அறி­வித்­தி­ருக்­கி­றது. எப்­ப­டி­யி­ருப்­பினும் இந்த  கொரோனா வைரஸ் தாக்­கத்­தி­லி­ருந்து   இலங்கை மக்­களைப் பாது­காப்­ப­தற்கு  முடி­யு­மான  அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும்   எடுக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

எந்­த­வொரு குறை­பாடும்   இந்த விட­யத்தில் இருக்­கக்­கூ­டாது.    இதனைக் கவ­னத்தில் கொண்டு முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை  எடுக்­க­வேண்டும்.  அர­சாங்கம் மற்றும்  சுகா­தார அமைச்சு  பல்­வேறு  முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கைகள் தொடர்­பான அறி­வு­றுத்­தல்­களை மக்­க­ளுக்கு வழங்­கி­யி­ருக்­கி­றது. முக்­கி­ய­மாக   உலக சுகா­தார ஸ்தாப­னத்தின் அறி­வு­றுத்­தல்­க­ளுக்கு  ஒத்­த­தா­கவே  சுகா­தார  அமைச்சின்  அறி­வு­றுத்­தல்கள் அமைந்­தி­ருக்­கின்­றன.

சுகா­தார அறி­வு­றுத்­தல்கள்
அதன்­படி கைகளை  அடிக்­கடி சவர்க்­கா­ர­மிட்டு கழு­வ­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.   20 விநா­டிகள்  தொடர்ச்­சி­யாக கைகளைக் கழு­வு­மாறு     அறி­வு­றுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. அதே­போன்று   தேவை­யற்ற விதத்தில் எந்­நே­ரமும்  மக்கள் தமது கைக­ளினால் வாய், மூக்கு, கண்­களை  தொடு­வதைத் தவிர்க்­கு­மாறும்   அறி­வு­றுத்­தப்­பட்­டி­ருக்­கி

ன்­றது.   இரு­மும்­போது  துணி­யினால் மூக்கு, வாய்ப்­ப­கு­தி­களை  மூடு­மாறும் அறி­வு­றுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.     மக்கள் அதிகம் கூடு­கின்ற  இடங்­களைத் தவிர்க்­கு­மாறும்    கோரப்­பட்­டி­ருக்­கி­றது.     தேவை­யின்றி அடிக்­கடி   பொருட்கள், வாக­னங்கள்   உள்­ளிட்­ட­வற்றில் கைகளை வைப்­பதை தவிர்ப்­பதும்  சிறந்­த­தாகும் என்று   அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

காய்ச்சல்,  தடுமல், மூச்­சுத்­தி­ணறல் போன்ற   சுக­வீ­னங்கள் ஏற்­பட்டால் மருத்­து­வரை நாடு­மாறும்   கோரிக்கை விடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.  அது­மட்­டு­மன்றி உலக சுகா­தார ஸ்தாப­னத்­தி­னாலும்   இலங்கை சுகா­தார அமைச்­சினால் வழங்­கப்­ப­டு­கின்ற  புதிய  அறி­வு­றுத்தல் தொடர்­பாக  அவ­தா­ன­மாக இருக்­கு­மாறும்  முன்­னெச்­ச­ரிக்கை அறி­வு­றுத்­தல்கள் விடுக்­கப்­பட்­டுள்­ளன.

உதா­ர­ண­மாக  ஒருவர் தும்­மும்­போது அவரின் உமிழ்நீர் துகல்கள்  அரு­கி­லுள்ள பல பொருட்­களில்  படியும்.  அந்த பொருட்­களில் ஏனை­ய­வர்கள் கைவைத்­து­விட்டு  அந்தக் கையினால்   மூக்கு, வாயை தொடும் போது  தொற்று பர­வு­வ­தற்­கான சாத்­தியம் இருக்­கின்­றது.  எனவே இதற்கு  கைகளை கழு­வு­வதே  மிக முக்­கி­ய­மான ஒரு வழி­யாக அமைந்­தி­ருக்­கின்­றது.

உமிழ்நீர்
இந்த வைரஸ் தொற்­றா­னது  உமிழ்­நீ­ரினால் மட்­டுமே பர­வு­வ­தாக அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இது காற்­றினால் பர­வு­வது இல்லை.  எனவே   இரண்­டுபேர் உரை­யா­டும்­போது   குறிப்­பி­டத்­தக்க  இடை­வெ­ளியைப் பேணு­வது சிறந்­த­தாக இருக்கும். அது­மட்­டு­மன்றி   நோயாளி  ஒரு­வ­ருக்கு அருகில் இருப்­பவர் முக­க்க­வ­சத்தை அணி­ய­வேண்டும்.  அதே­போன்று   வைத்­தி­ய­சா­லை­களில் பணி­யாற்­று­கின்­ற­வர்கள் முக­க்க­வ­சத்தை  அணி­வது  அவ­சி­ய­மா­னது என்று அறி­வு­றுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.  அந்த வகையில் இலங்­கையில் தற்­போது இரு­வ­ருக்கு இந்த  வைரஸ் தொற்று ஏற்­பட்­டுள்­ளதால் மக்கள் விழிப்­புடன் இருக்­க­வேண்டும். அதற்­காக மக்கள்   தொடர்ந்தும்    பதற்­ற­ம­டை­ய­வேண்­டிய அவ­சி­ய­மில்லை.  சரி­யான முன்­னெச்­ச­ரிக்கை  செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்கும் பட்­சத்தில்   இதி­லி­ருந்து மீள முடியும்.   பொறுப்­புடன் செயற்­ப­டுங்கள்

எனவே இதனை ஒரு  நெருக்­கடி மிக்க கால­மாகக் கருதி மக்கள் தொடர்ச்­சி­யாக விழிப்­பு­டனும்  பொறுப்­பு­டனும்  செயற்­ப­ட­ ஏற்­பட்­டுள்ள நிலையில் அவர் 14 நாள் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட சிகிச்­சைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கிறார்.      இவ்­வாறு மிகவும்  மோச­மான நிலையில்

கொரோனா வைரஸ் தாக்கம் உலகை ஆட்­டிப்­ப­டைத்துக் கொண்­டி­ருக்­கி­றது.   பொரு­ளா­தாரம்,  உல­க­ளா­வி­ய­ரீ­தியில்  சரி­வ­டைந்து செல்லும் அபா­யத்தை எதிர்­கொண்­டுள்­ளது.  விமான போக்­கு­வ­ரத்து, கப்பல் போக்­கு­வ­ரத்து என்­பன ஸ்தம்­பி­த­ம­டைந்­துள்­ளன. இன்­றைய நிலை­மையில்   நவீன தொழில்­நுட்ப வளர்ச்சி கார­ண­மாக  உலக நாடுகள் அனைத்தும்  ஒன்­றுடன் ஒன்று தொடர்­பு­பட்­டுள்­ளன.  முழு உல­கையும் ஒரு கிராமம் என்றே கூறு­கின்­றனர். எனவே பல்­வேறு வழி­க­ளி­லான தொடர்­புகள்   அதி­க­ரித்­துள்­ளன. எனவே  இது­போன்ற  வைரஸ் தொற்று நோய்கள்   உல­க­ளா­விய  மட்­டத்தில்   பர­வு­வ­தற்­கான   அபாயம்   அதி­க­ரித்து  காணப்­ப­டு­கின்­றது. அதனால்    இங்கு நாம் செய்­ய­வேண்­டி­யது என்­ன­வெனில் உரிய  அறி­வு­றுத்­தல்­களைப் பின்­பற்­று­வ­தாகும்.

இது தொடர்பில் சுகா­தார அமைச்சும் பாது­காப்பு தரப்­பி­னரும் பல்­வேறு அறி­வு­றுத்­தல்­களை வழங்கி வரு­கின்­றன.   முக்­கி­ய­மாக அந்த அறி­வு­றுத்­தல்­களை பின்­பற்றி சுகா­தார  முறை­மைக்­கூ­டாக    செயற்­ப­டு­வதே  தற்­போ­தைய சூழலில் மிகவும் பொருத்­த­மாக அமைந்­தி­ருக்­கின்­றது.  அடிக்­கடி சவர்க்­கா­ர­மிட்டு கைக­ளைக்­க­ழுவும் கலா­சாரம்

உல­க­ளா­விய ரீதியில்    கட்­டா­ய­மாக  முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும் என வலி­யு­றுத்­தப்­ப­டு­கின்­றது. இது இந்த கொரோனா வைரஸ் தாக்­கத்­திற்கு மட்­டு­மல்ல எந்­த­வொரு  நோய்த் தொற்­றி­லி­ருந்தும் எம்மைப் பாது­காத்­துக்­கொள்­வ­தற்கும்    முக்­கி­ய­மாக அமை­கின்­றது.

கை கழு­வு­வதை பழக்­கப்­ப­டுத்­திக்­கொள்­ளுங்கள்
இது தொடர்பில் சமு­தாய வைத்­திய நிபுணர் டாக்டர் கேசவன் அறி­வு­றுத்­தல்­களை வழங்­கு­கையில்,

வயது முதிர்ந்­த­வர்­களை இந்த வைரஸ் அதி­க­ளவில் தாக்­கு­வ­தாக கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.  எனவே  60 வய­துக்கு  மேற்­பட்­ட­வர்­களும் ஏற்­க­னவே ஏதா­வது ஒரு நோயினால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­வர்­களும்  இதில் கவ­ன­மாக   இருக்­க­வேண்டும். நீரி­ழிவு, இதய நோய் உள்­ளிட்ட நோய்கள் உள்­ள­வர்கள் கவ­ன­மாக இருக்­க­வேண்டும். இங்கு நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பில் பேசப்­ப­டு­கின்­றது. உண்­மையில் நோய் எதிர்ப்பு சக்தி  இருப்­ப­துடன் உரிய  உடற்­ப­யிற்­சி­களை செய்­து­வந்தால் எந்த நோயி­லி­ருந்தும் எம்மைப் பாது­காத்­துக்­கொள்ள முடியும். எனவே போஷாக்கான உணவை உட்கொள்தல்,  புகை மற்றும் மதுவை பயன்படுத்தாதிருத்தல், உடற்பயிற்சிகளைச் செய்தல் என்பன முக்கியமாகும். சுகாதார பழக்க வழக்கங்களைப் பேணுவது  அவசியமாகும். கை கழுவுதல் என்பது ஒரு கலாசாரமாக மாறவேண்டும்.   தற்போதைய நிலைமையில் மக்கள் அநாவசியமாக வெளியே செல்வதை தவிருங்கள். கூட்டம் கூடுவதையும்  தவிர்ப்பது  சிறந்தது.  முடியுமானவரை வீடுகளில் இருங்கள்.  வெளிநாடுகளில் இருந்து குடும்ப உறுப்பினர்கள் யாராவது வந்திருந்தால் அவர்களுடன்  சுகாதார  அறிவுறுத்தல்களின்படி செயற்படுங்கள் என்று  குறிப்பிட்டார்.

வெப்பநிலை
இதேவேளை  இலங்கையில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுவதால்   கொரோனா   வைரஸ்    இலங்கைக்குள் மக்களைதாக்காது என்று பல்வேறு  தரப்பினராலும் கூறப்பட்டு வருகிறது.   எனினும் அது  விஞ்ஞான ரீதியாக  உறுதிப்படுத்தப்படவில்லை. இலங்கையின் வெப்பநிலை 30பாகை செல்சியஸைத் தாண்டியே நீடித்து வருகிறது.  அந்த உயர்வெப்பநிலை காரணமாக இதனை முறியடிக்க முடியுமா என்பது இன்னும்   உலக  சுகாதார ஸ்தாபனத்தினால் கூட உறுதிப்படுத்தப்படவில்லை என்று வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எப்படியிருப்பினும்  தற்போது  இருவருக்கு   இந்த வைரஸ்  தொற்று ஏற்பட்டுள்ளதன் காரணமாக இலங்கை மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்கவேண்டியது அவசியமாகும். அதற்காக  வீண் பதற்றமடையவேண்டிய அவசியமில்லை. ஆனால் சுகாதார அறிவுறுத்தல்களை   பின்பற்றி   உரிய  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது  அத்தியாவசியமாகும்.  எம்மை   இந்த நோயிலிருந்து பாதுகாத்துக ்கொள்வதற்கு  முதலில் நாமே பொறுப்புடனும் முன்னெச்சரி க்கையுடனும்  இருக்கவேண்டியது இன்றியமையாதது. அத்துடன்  இதனை முறியடிப்பதற்கான அரசாங்கத்தின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு  வழங்குவது கட்டாயமாகும்.

Back to top button