செய்திகள்

ஜப்பான் மருந்தினால் வைரஸ் பாதிப்புகள் குறைகின்றன- சீனாவிலிருந்து நம்பிக்கையளிக்கும் ஒரு தகவல்

ஜப்பானில் தயாரிக்கப்பட்ட காய்ச்சல் மருந்து கொரேனா வைரசினை கட்டுப்படுத்துவதில் பலனுள்ளதாக காணப்படுகின்றது என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சின் அதிகாரி ஜாங் ஜின்மின் இதனை தெரிவித்துள்ளார்.

வுகானிலிலும் சென்செகெனிலும் 340 நோயாளிகள் மத்தியில் இந்த மருந்தினை பரிசோதித்து பார்த்ததில் நல்ல முடிவுகள் கிடைத்துள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

பபிபிரவிர் favipiravir என்ற மருந்தே சிறப்பாக செயற்படுகின்றது என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த மருந்து பாதுகாப்பானதாகவும் மிகவும் பயனுள்ளதாகவும் காணப்பட்டது என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

கொரோனவைரசினால் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட நோயாளிகளிற்கு இந்த மருந்தை வழங்கி நான்கு நாட்களின் பின்னர் வைரஸ்பாதிப்பு தென்படவில்லை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என ஜப்பானின் என்எச்கே ஊடகம் தெரிவித்துள்ளது.

இது தவிர எக்ஸ்ரே பரிசோதனைகளின் சுவாசக்குழாய்களில் முன்னேற்றம் தென்பட்டுள்ளது.

ஜப்பான் மருந்தினை பயன்படுத்தி கிசிச்சை வழங்கப்பட்ட 91 வீத நோயாளிகளில் இந்த மாற்றம் தென்பட்டுள்ளது.

எனினும் இந்த மருந்தை உற்பத்தி செய்யும்  நிறுவனம் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது.

இதேவேளை சீன அதிகாரியின் இந்த கருத்தினை தொடர்ந்து குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்கு சந்தை நிலவரத்தில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை சிறிதளவு பாதிப்புள்ளவர்களை அடிப்படையாக வைத்து ஜப்பான் மருத்துவர்கள் இநத மருந்தினை பரிசோதனை செய்துவருகின்றனர்.

இதேவேளை கடுமையான பாதிப்புகள் உள்ளவர்களிற்கு இந்த மருந்தினால் பலாபலன் கிட்டாது என ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Back to top button