செய்திகள்

ஒரு லட்சம் வாத்துகள், 1000 கோடி ரூபாய் பணம், 20 விமானங்கள்: வெட்டுக்கிளியை சமாளிக்க இவ்வளவு வேண்டுமா?

கிழக்கு ஆப்ரிக்கா மற்றும் தெற்காசியாவில் பில்லியன்கணக்கான வெட்டுக்கிளிகள் பயிர்களையும், வாழ்வாதாரங்களையும் அச்சுறுத்தி வருகின்றன.

வெட்டுக்கிளிபடத்தின் காப்புரிமை REUTERS

தங்கள் மொத்த உடலளவிற்கு உணவு உண்ணும் இந்த வெட்டுக்கிளிகள், விரைவாக இனப்பெருக்கம் செய்யக்கூடியது.

மரங்களில் வெட்டுக்கிளிகள்படத்தின் காப்புரிமை REUTERS

ஜனவரி மாதம் இந்த நெருக்கடியை சமாளிக்க 76மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவை என ஐ.நா கோரியது.

ஆனால் தற்போது அந்த தொகை 138 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.

வெட்டுக்கிளிபடத்தின் காப்புரிமை REUTERS

இந்த அச்சுறுத்தல் கிழக்கு ஆப்ரிக்கா, ஏமன், வளைகுடா நாடுகள், இரான், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு உள்ளது.

சமீபத்தில் காங்கோ ஜனநாயக குடியரசை இந்த வெட்டுக்கிளிகள் தாக்கியது.

வெட்டுக்கிளிகளுக்கு பூச்சி மருந்துபடத்தின் காப்புரிமை AFP

இந்த பூச்சிகளை கட்டுப்படுத்த வானிலிருந்தும், தரையிலிருந்தும் மருந்து அடிக்க வேண்டும். ஆனால், தற்போது போதிய விமானங்கள் இல்லை என கிழக்கு ஆப்ரிக்காவின் பாலைவன வெட்டுக்கிளி தடுப்பு மையத்தின் தலைவர் ஸ்டீஃபன் ஜோகா பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

பயிர்களில் வெட்டுக்கிளிகள்படத்தின் காப்புரிமை GETTY IMAGES

தற்போது எத்தியோப்பியா ஐந்து விமானங்களும், கென்யா ஆறு விமானங்களை பூச்சி மருந்து தெளிப்பதற்கும், நான்கை கண்காணிப்பதற்கும் பயன்படுத்தி வருகிறது என அவர் தெரிவித்துளார்.

ஆனால் கென்ய அரசு தங்களுக்கு 20 விமானங்கள் தேவை என்று தெரிவித்துள்ளது.

மரங்களில் வெட்டுக்கிளிகள்படத்தின் காப்புரிமை AFP

பாதிக்கப்பட்ட நாடுகளில் வெட்டுக்கிளிகளை கண்காணிக்க 240 பேருக்கு கென்யா பயற்சி வழங்கியுள்ளது.

பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப்புபடத்தின் காப்புரிமை GETTY IMAGES

பிப்ரவரி மாதம் இந்த பிரச்னையில் பாகிஸ்தானுக்கு உதவ நிபுணர்கள் குழுவை அனுப்பவுள்ளதாக சீனா தெரிவித்தது.

வெட்டுக்கிளிகளுக்கு பூச்சி மருந்துபடத்தின் காப்புரிமை AFP

மேலும் ஒரு லட்சம் வாத்துக்களை அனுப்பவும் சீனா முடிவு செய்துள்ளது.

வெட்டுக்கிளிபடத்தின் காப்புரிமை AFP
வெட்டுக்கிளிபடத்தின் காப்புரிமை GETTY IMAGES

இயற்கையாக வாத்துக்கள் வெட்டுக்கிளிகளுக்கு எதிரானவை.

வெட்டுக்கிளிபடத்தின் காப்புரிமை EPA
வெட்டுக்கிளிபடத்தின் காப்புரிமை AFP

ஒரு கோழி நாள் ஒன்றுற்கு 70 பூச்சிகளை உணவு உட்கொண்டால் , வாத்து அதைக்காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக பூச்சிகளை உட்கொள்ளும்.

வெட்டுக்கிளிபடத்தின் காப்புரிமை EPA
பில்லியன் கணக்கான வெட்டுக்கிளிபடத்தின் காப்புரிமை REUTERS

Back to top button