செய்திகள்

சந்தோசமான செய்தி ! உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 10 இலட்சத்தை கடந்தது

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 32 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 10 இலட்சத்தை கடந்துள்ளது.

ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிபரங்களின்படி 10 இலட்சத்து 14 ஆயிரம் 524 பேர் கொரோனா தொற்றுநோயிலிருந்து பூரண குணமடைந்துள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஹுபேய் மாகாணம் வுஹான் நகரத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸால் சர்வசேத ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 33  ஆயிரத்து  300 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் தொடரும் கொரோனா வைரஸ் பரவலால், பாதிப்பு 11 லட்சத்தையும், உயிரிழப்பு 63 ஆயிரத்தையும் நெருங்கியுள்ளது.

அமெரிக்காவில் குணமடைந்தோர் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை நெருங்கியுள்ளது. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 29,515 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு,  2040 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில், 6 வாரங்களில் இல்லாத வகையில், உயிரிழப்பு 268-ஆக குறைந்துள்ளது. ஸ்பெயினில் மொத்த உயிரிழப்பு 25 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

இத்தாலியில் ஒரே நாளில் 285 பேர் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழப்பு 28 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

பிரான்சில் உயிரிழப்பு 24 ஆயிரத்தையும், பிரிட்டனில் உயிரிழப்பு 26 ஆயிரத்தையும் கடந்துள்ளன.

ரஷ்யாவில் பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்துள்ளது. உலகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக உயிரிழப்பு 2 லட்சத்து 28 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்நிலையில் ரஷ்யாவின் பிரதமருக்கும் கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button