செய்திகள்

விழுந்து நொருங்கிய விமானத்தின் இறுதி நேரக் காணொளி? உண்மையில் நடந்தது என்ன?

நன்றி – IBCதமிழ்
எதியோப்பிய விமான விபத்து தொடர்பாக சில போலியான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களிலும் இணையங்களிலும் பகிரப்பட்டுவருவதாக கண்டறியப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை எதியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக (ET302) விமானம் விழுந்து நொருங்கிய சம்பவத்துடன் தொடர்புடையதாகவே இந்த காணொளிகளும் புகைப்படங்களும் பகிரப்பட்டுவருவதாக சொல்லப்படுள்ளது.
குறிப்பாக விமானம் விழுவதற்கு முன்னர் அந்த விமானத்தினுள் அவசர நிலை ஏற்பட்டு அனைத்து பயணிகளும் ஒட்சிசன் முகமூடிகளை அணிந்து மிகவும் பதற்றத்துடன் காணப்படும் காணொளியொன்று வெளியாகி வைரலாகியுள்ளது. இதனை ஆபிரிக்கர் ஒருவர் தனது டுவிட்டர் தளத்தில் தரவேற்றி பகிர்ந்திருக்கிறார்.
ஆனால் அந்த காணொளி விழுந்து நொருங்கிய விமானத்தில் எடுக்கப்பட்டதில்லை என்பதற்கு வலுவான சான்றாதாரங்கள் கிடைத்திருக்கின்றன.
விழுந்து நொருங்கிய விமானத்திலிருந்து உருப்படியாக எந்தப் பொருளுமே மீட்கப்படவில்லை என்று எதியோப்பியா அறிவித்துள்ள நிலையில் இந்தக் காணொளி எங்கிருந்து வந்தது என பலர் காரசாராமாக கேட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த காணொளி கடந்த மார்ச் மாதம் 4ஆம் திகதி அடிஸ் ஆபாவிலிருந்து கனடாவின் ரொரண்டோ சென்ற ET502 விமானத்தில் பதிவாகியது என்று கூறப்பட்டுள்ளது.
குறித்த விமானம் அடிஸ் ஆபாவிலிருந்து ரொரண்டோ சென்றுகொண்டிருந்தபோது சவூதி அரேபியாவுக்கு நேரே அவசர நிலையில் சிறிது நேரம் தத்தளித்துள்ளது. அதாவது திடீரென்று விமானம் சுமார் பத்தாயிரம் அடிகளுக்கு தாழிறங்கிப் பயணித்துள்ளதனால் விமானத்தினுள் அவசர நிலைமை அறிவிக்கப்பட்டது. இதன்போதே அந்த காணொளி பதிவுசெய்யபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
போயிங் 777 ரகத்தினையுடைய அந்த விமானத்தில் பயணிகளுக்கு நேர்ந்த சிரமம் குறித்து எதியோப்பிய விமான நிறுவனம் மன்னிப்புக் கோரி அறிக்கையொன்றையும் வெளியிட்டது.
படம்: நன்றி டுவிட்டர்
விழுந்து நொருங்கிய விமானத்தின் இறுதி நேரக் காணொளி? உண்மையில் நடந்தது என்ன? 1
மேலும் குறித்த காணொளியிலுள்ள விமானத்தில் இரண்டு நடைபாதைகள் உள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. ஆனால் விழுந்து நொருங்கிய விமானத்தில் ஒரு நடைபாதையே இருக்கும். ஏனெனில் அது போயிங் 773 ரகத்தினையுடையதாகும்.
எனவே அதுகுறித்து பரப்பப்படும் காணொளி தவறானது எனும் முடிவுக்கு வரமுடியும்.
படம்: போயிங் 777 ரக விமானத்தின் இரண்டு நடைபாதை
விழுந்து நொருங்கிய விமானத்தின் இறுதி நேரக் காணொளி? உண்மையில் நடந்தது என்ன? 2
படம்: போயிங் 737 ரக விமானத்தின் ஒற்றை நடைபாதை
விழுந்து நொருங்கிய விமானத்தின் இறுதி நேரக் காணொளி? உண்மையில் நடந்தது என்ன? 3

Back to top button