செய்திகள்

‘வெளிநாடுகளிலிருந்து வரும் அனைவரும் தம்மை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்’

கொரோனோ வைரஸ் தாக்கம் தொடர்ந்தும் அதிகரித்துவரும் பின்னணியில் வெளிநாடுகளிலிருந்து ஆஸ்திரேலியா வரும் அனைவரும் 14 நாட்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டுமென பிரதமர் ஸ்கொட் மொறிசன் அறிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும்வகையில் இவ்வறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று வெளிநாடுகளிலிருந்து வரும் உல்லாச பயணக்கப்பல்களுக்கும் அடுத்த 30 நாட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக பிரதமர் அறிவித்தார்.

இதேவேளை நாடுமுழுவதும் பாடசாலைகள் தொடரந்தும் இயங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதுவரை ஆஸ்திரேலியாவில் 250 பேர் கொரோனோ வைரஸ் தொற்றுக்கு உள்ளானமை உறுதிசெய்யப்பட்ட அதேநேரம் இவர்களில் 23 பேர் குணமடைந்துள்ளனர்.

இதுதவிர இத்தொற்று காரணமாக ஆஸ்திரேலியாவில் மூவர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button